பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Фль, зы. «Б» талч-9sus» 223 என் உடையை மாற்றிக் கொள்ளும்படி அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களோடு மிக நெருக்கமாக இருப்பதற்கு அது தேவை என்று சாடையும் காட்டவில்லை. நான் 'குடியரசு’க்காரன் நான் அப்போது பெரியாரின் குடியரசு வார இதழை வாங்கிப் படிப்பவன். அதுவும் காந்தியவாதிகளாகிய அவர்களுடைய நட்புக்கும் அன்பிற்கும் அடைக்குந் தாழாக அமையவில்லை. என்னே அவர்கள் பெருந்தன்மை! திரு. சி.டி. நாயகத்தின் நெருங்கிய உறவினராகிய திரு. கமலசாமி என்பார் திரு. சி. சுப்பிரமணியத்தின் வகுப்பில் படித்து வந்தார். அவர் மட்டும் என்னிடம் 'குடியரசு"க்காரன் என்னும் அடிப்படையில் நட்புக் கொண்டார். இவர் பின்னர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உயர்ந்தார். தமிழ் இசை இயக்கத்திற்குச் சிறப்பாகத் தொண்டாற்றினார். முன்னே குறிப்பிட்ட திரு. சின்னசாமியும் இராமகிருஷ்ணனும் குடியரசைப் படிக்கத் தவறமாட்டார்கள். - நான் இரண்டாம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்தபோது, திரு அ. அளகிரிசாமி விடுதிக்கு வந்து சேர்ந்தார். மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாட ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தார். மேற்கூறிய திருக்கூட்டத்தில் முக்கியமானவரானார். அவரும் காந்தியவாதி; கதர் அணிபவராகவே அறிமுகமானவர். இவர்கள் அனைவரும் எனக்கு ஊக்க மூட்டும், நம்பிக்கை யூட்டும் நண்பர்களாக விளங்கினார்கள்; விளங்குகிறார்கள். 27. வனமலர்ச் சங்கம் கங்கையும் யமுனையும் பிரம்மபுத்திராவும் கோதாவரியும் மகாநதியும் நர்மதையும் கிருஷ்ணாவும் காவிரியும் புகழ்பெற்ற ஆறுகள. இவை எத்தனையோ இலட்சம் ஏக்கர்களை வளப்படுத்துகின்றன. பாலாறும் வைகையும் சில இலட்சம் ஏக்கர்களுக்குப் பாயலாம். இவை மட்டுமா மக்களை வாழ்விப்பவை? நூற்றுக்கணக்கான சிற்றோடைகளும் சில ஆயிரம் ஏக்கர் பயிர்களுக்கு உதவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/265&oldid=787068" இலிருந்து மீள்விக்கப்பட்டது