பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 227 சங்க விதியாக இல்லாவிட்டாலும் சங்க உறுப்பினர்களில் பெரும் பாலோர் கதர் அணியத் தலைப்பட்டனர். இந்திய விடுதலையே குறிக்கோள் வனமலர்ச் சங்கம் எந்தக் கட்சியைச் சார்ந்தது? எக் கட்சியையும் சாராதது. கட்சிச்சூழல்களுக்கு அப்பால் நின்று, இந்திய விடுதலைக்கும் மக்கள் சமத்துவத்திற்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சங்கம் பாடுபட்டது. பெரியசாமித் துரன் வனமலர்ச் சங்கத்தின் தேனிக்களில் ஒருவர். சி. சுப்பிரமணியம் சங்கத்திற்குக் கணக்குத் தனிக்கையாளர். என் நண்பர்கள் பலர் உறுப்பினர்கள். அவர்கள் என்னை உறுப்பினர் ஆகும்படி தூண்டினார்கள். வனமலர்ச் சங்கத்தில் சேர்ந்தேன் சங்கத்தைப் பற்றிய தகவல்களை எழுதி, அதில் சேர விடை கொடுக்கும்படி என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். மறுப்பு பதிலே வரும் என்று அஞ்சினேன். ஏன்? அதற்குமுன், சென்னை பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கத்தில் சேருவதற்கு ஒப்புதல் கேட்டு எழுதியிருந்தேன். அதற்கான தூண்டுதல் எப்படி வந்தது? நீதிக்கட்சியின் ஆங்கில நாளிதழில் பிழை திருத்துவோராகப் பணிபுரிந்த திரு. சமது என்பவர் என் விடுதிக்கு வந்தார். எட்டனாவிற்கு, இளைஞர் சங்கச் சார்பாக வெளியிட்ட நாள்குறிப்பை விற்றார். சங்கத்தில் சேர்க்க வலை வீசினார். எனக்குச் சபலம் வந்தது. "படிக்கப்போன நான், படிப்பிலேயே கருத்தாயிருக்கவேண்டும். அரசியல் தொடர்புடைய சங்கத்தில் சேர்ந்து, கவனத்தைச் சிதைத்துக் கொள்ள வேண்டாம் என்று தந்தையார் எழுதிவிட்டார். அதே கதி நேரிடும் என்று எதிர்பார்த்தேன். என் தந்தை, வனமலர்ச் சங்க நண்பர்கள் சிலரை விடுதியில் பார்த்ததுண்டு. அவர்கள்மேல் நல்ல நம்பிக்கை. எனவே, வனமலர்ச் சங்கத்தில் நான் சேர ஒப்புக் கொண்டார். 'படிப்பிற்கு இடையூறு இன்றி ஈடுபடு' என்று விழிப்பூட்டினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வனமலர்ச் சங்கம் அறுபதாண்டுகளுக்கு முன், சமுதாயச் சீர்திருத்த இயக்கம் எதுவும் தோன்றுவதற்கு முன், இளைஞர்களின் இத யத்தில் மலர்ந்தது வனமலர்ச் சங்கம். முற்போக்கான சிந்தனைகளை விரித்தது. சமத்துவ மனமும் தமிழ் மனமும் வீசியது. கலப்பு மணக் கொள்கையை அன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/269&oldid=787072" இலிருந்து மீள்விக்கப்பட்டது