பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நினைவு அலைகள் முதலியோர் பித்தனுக்கு எழுதினார்கள். இவர்களுக்கெல்லாம் மூத்தவராகிய சது.சுப்பிரமணிய யோகி தொடர்ந்து பித்தனுக்கு எழுதி வந்தார். திரு. தா. சீனிவாசன் 1917 அக்டோபரில் இரவிய நாட்டில் நிகழ்ந்த உலகத்தை உலுக்கிய பெரும் புரட்சியைப் பற்றியும் சோவியத் ஆட்சி முறையைப் பற்றியும் தொடர் கட்டுரைகள் எழுதினார். 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பார்கள். அதைப் போல், இளைஞர்கள் நடத்திய, மக்கள் கவனத்தைக் கவராத, பித்தன் புகழும் எட்ட வேண்டிய இடங்களுக்கு எட்டியது. எனவே, பித்தன்ரின் இரண்டாவது மலரின் நான்காம் இதழில், அப்போது மாத இதழாக நடந்து வந்த ஆனந்த விகடன் விளம்பரஞ் செய்தது. 'ஆனந்த விகடன் ஒரு நூதன மாதப் பத்திரிகை. 12,000 சந்தாதாரர்களையுடையது. ஐந்தாம் ஆண்டு பிறந்துவிட்டது. மாதிரி பிரதி இனாம் என்ற விளம்பரத்தைப் பித்தன் தாங்கி வந்தது. ஒரு கால கட்டத்தில், 'ஆனந்த விகடன் பெரியார் திரு. ஈ.வெ. ராமசாமியின் கட்டுரைகளைக் கேட்டு வாங்கிப் போட்டு வளர்ந்தது, இப்போது நினைவிற்கு வருகிறது. பெரியார் - திரு.வி.க. ஆதரவு 'பித்தன் கட்சிச் சார்பற்ற இதழ். எனவே, அக்கால கட்டத்தில் எதிர் எதிர் அணிகளில் பணிபுரிந்த இரு பெரியவர்களின் ஆதரவைப் பெற்றது. திரு. ஈ.வெ.ரா. தமது குடியரசு வார இதழில் நான்கு வாரங்கள் 'பித்தனை விளம்பரப்படுத்தினார். அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். திரு.வி.க.வும் தமது நவசக்தி வார இதழில் நான்கு வாரங்கள் 'பித்தன் விளம்பரத்தை வெளியிட்டார். அவரும் உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பித்தனுக்கு என்று தனிச் சந்தா வசூலிக்கவில்லை. வனமலர்ச் சங்க உறுப்பினர்களுக்கு இலவசம். அவர்கள் செலுத்திய ஆண்டு சந்தா நான்கைக் கொண்டே பித்தனை நடத்தினோம். அந்நிலையில் பெரியாரும் இராயப்பேட்டை முனிவரும் புரிந்த உதவி பெரிதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/272&oldid=787076" இலிருந்து மீள்விக்கப்பட்டது