பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 233 பித்தன் முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை உருவாக்கியது. அதில் வெளியான கவிதைகளும் சிறுகதைகளும் கட்டுரைகளும் படிக்கத் தெரிந்த அனைவருடைய கவனத்தையும் கவர்ந்தது. 29. பித்தனின் கருத்தோட்டம் இளைஞர் மாநாடும் பித்தனும் 'பித்தன் பொதுநலக் கொள்கைகளைக் கட்சிக் கண்ணோட்டத் தோடு அணுகவில்லை. தனக்கென்று நடுவழியொன்றைப் பின்பற்றியது. சென்னையில் 1929 இன் தொடக்கத்தில் இரு இளைஞர் மாநாடுகள் நடந்தன. திரு. பிரகாசம் தலைமையில் கூடிய இளைஞர் மாநாட்டில், தேச பக்தியுள்ள ஒவ்வோர் இளைஞரும் சைமன் கமிஷன் பகிஷ்காரம் சரிவர நிறைவேறத் தன்னாலான உதவி செய்ய வேண்டும். 'காங்கிரசின் இவ்வருஷத்திய சமூக ஆக்க வேலைத் திட்டங்களை இம்மாநாடு ஒப்புக் கொள்கிறது. 'பூர்ண சுயராஜ்யமே இம்மாநாட்டின் நோக்கம். தாய்நாட்டின் விடுதலைக்காக வாலிபர் அனைவரும் முனைந்து பாடுபடவேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது என்று முடிவுகள் செய்யப் பட்டன. இவற்றை வெளியிட்ட பித்தன், திரு. ஆ. இராமசாமி முதலியார் தலைமையில் சென்னையில் கூடிய மற்றோர் இளைஞர் மாநாட்டு முடிவுகளையும் வெளியிட்டு, தமது கருத்தை வெளியிட்டது. முடிவுகள் என்ன? பித்தனின் கருத்துகள் எவை? மகிழ்ச்சியும் வருத்தமும் 1. வாலிபர்கள், சாதி, மத, நிற வேற்றுமைகளை ஒப்புக் கொள்ளாமல், அவைகளின் இருப்பையே மறந்தவர்களாக, வாழவேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. 2. மாணவர் விடுதிகளில் வகுப்புப் பிரிவுச் சாப்பாடு கூடாது. 3. கலப்பு உணவு விடுதிகளிலேயே மாணவர்கள் சேர வேண்டும். 4. வகுப்பு வேற்றுமைகளை மாணவர் விடுதி அதிகாரிகள் நீக்கிவிட வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறது. ஆற்காடு இராமசாமி முதலியார் தலைமையில் கூடிய இளைஞர் மாநாடு மேற்கூறிய நான்கு முடிவுகளை மேற்கொண்டது. பித்தனுக்கு இவை நான்கும் உடன்பாடானவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/275&oldid=787079" இலிருந்து மீள்விக்கப்பட்டது