பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 235 இராஜதானியில் கல்வி கற்றவர்கள் மொத்த ஜனத்தொகையில் 100க்கு 6.2 பேர். இதில் ஆண் 100க்கு 9.9தும் பெண் 100க்கு 2.8ம் ஆகும். ஒராண்டில் மாணவர்களின் தொகை 1000க்கு இரண்டுதான் அதிகமாகியிருக்கிறது. 'ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்பார்கள். ஐம்பதுக்கு மூன்று என்றால் என் செய்வது?" என்று பித்தன் மிகவும் வேதனைப்பட்டது. 1926-27ஆம் ஆண்டில் இருந்த பள்ளிகளில் 3578 பள்ளிகள் அடுத்த ஆண்டுகளில் இல்லை என்று பொதுக்கல்வி இயக்ககமே பறைசாற்று கிறது. கல்வியை வளர்க்க வேண்டிய கல்வித்துறை, கல்வியை முடக்கும் மற்றும் குறைக்கும் துறையாகச் செயல்பட்டிருக்கிறது. 1927-28ஆம் ஆண்டு புதிய அமைச்சரவையின் முதலாண்டு. எப்போது அமைச்சரவை மாறினாலும், மாறும் பொழுதில், கல்வித்துறையினர், கல்வி வெள்ளத்தைத் தடுப் பதிலேயே முனைதல், தமிழ்நாட்டின் பொல்லாத மரபு. அதன் தொடக்க விழா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்தது. நிற்க, பித்தனும் மதுவிலக்கும் 'குடியைத் தடுக்கவும் தடை என்ற தலைப்பில் பித்தன் தனது கருத்தை எழுதியதைப் படியுங்கள். 'சென்னை இராஜதானியில் இருபது வருஷத்தில் குடியை அறவே ஒழித்துவிட வேண்டுமென்ற தீர்மானம் சென்னைச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தையும் துரைத்தனம் கடலில் துக்கி எறிந்துவிட்டது. குடியை ஒழித்தால் இராஜாங்கத்திற்கு வரும்படி குறைந்துவிடுமாம். - 'அமெரிக்காவில் குடியால் ஏராளமாய் வரும்படி வந்தது. அப்படியிருந்தும் அவ்வரசாங்கத்தார், குடியைத் தொலைக்க வேண்டுமென்று சட்டம் ஏற்படுத்தினர். அதனால் அவ்வருவும் குடியால் வரும் வரிப்பணத்தில் பத்து இலட்சம் பவுன் குறைந்து விட்டது. ஆனால் அதே வருஷத்தில் மொத்த வருவாயில் முந்தின வருஷத்தைவிட 25 இலட்சம் பவுன் அதிகமாயிருந்தது. 'குடியை நிறுத்துவதால் அரசாங்கத்தின் வரும்படி குறைந்து விடுமென்பது இனிமேல் பலிக்காது' என்று பித்தன், சான்றுகளுடன் கூறியது. அந்தப் பித்தனின் குரல் வீண்போகவில்லை. மூதறிஞர் இராஜாஜி சென்னை மாநிலப் பிரதமரானபோது, மதுவிலக்குத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். பல்லாண்டு நடைமுறையில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/277&oldid=787081" இலிருந்து மீள்விக்கப்பட்டது