பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நினைவு அலைகள் பல இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது குடிசைத் தொழிலாயிற்று. குட்டி அரசியல்வாதிகளின் பாதுகாப்பில், அதிகாரிகளின் பாராமுகக் கருணையால் கள்ள மது விற்பனை, பலவிடங்களுக்கும் பரவிற்று. 'மதுவிலக்குக் கொள்கை தோல்வி; அதனால் வருவாய் போயிற்று: கள்ள மது பெருகிற்று; குற்றங்கள் பெருகின; ஊழல்கள் மிகுந்தன. அதை நடைமுறைப்படுத்த முடியாது. பேசாமல், மதுவிலக்கை நீக்கிவிட்டால் அரசுக்குப் பணம் குவியும்; நிதிப் பற்றாக்குறை போகும்; வளர்ச்சித் திட்டங்களைத் தாராளமாகத் தீட்டலாம் இப்படி அடிக்கடி ஆலோசனைகள் ஒலிப்பதுண்டு. அதைக் கேட்டுப் பொதுமக்கள் மயங்குவதுண்டு. ஏன், அறிஞர்களும் குழம்புவதுண்டு. மதுவிலக்கும் கள்ள மதுவும் இது பற்றிய என் கருத்து: மது விலக்குக் கொள்கையில் பலாபலன் என்ன? காய்தல் உவத்தல் இன்றி எடைபோட வேண்டும். கள்ளுக்கடைகள் திறந்திருந்த காலத்து நிலையும், கள்ளுக்கடைகளை மூடிய பிறகு உருவான நிலையும் தெரிந்தால் மதிப்பீடு எளிதாகும். என்னுடைய ஆயுளில் ஏறத்தாழ முதல் முப்பதாண்டு காலம் கள்ளுக்கடைகள் ஆட்சி செய்த காலம். சாராயம் விற்ற காலம். அயல்நாட்டு மது வகைகளைக் குடிப்பதே பெரிய மனிதருக்கு அடையாளம், கவுரவம் என்று கருதப்பட்ட காலம். பிந்திய நாற்பதாண்டு காலம் இடையில் ஒராண்டு காலமும் பின்னர் மூன்றாண்டு காலமும் நீங்கலாக-மதுவிலக்கு காலம். மதுக்கடைகள் நடத்தும் உரிமையை ஏலத்தில் விட்டுக் கோடி கோடி ரூபாய்களை அரசு சம்பாதித்த முற்காலத்தில், திருட்டுக்கள் இறக்கியது கொஞ்சமல்ல; கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றதும் பெருமளவே. மது விலக்கைக் கொண்டு வந்ததால், கள்ளக் காய்ச்சல் வந்தது என்பது தெரியாத பேச்சு. கள்ள மது அன்றும் பரவலாக இருந்தது. அன்றும் காவல் அதிகாரிகளின் பாராமுகத்தால், அவர்களுக்குக் கொடுத்த மாமூலால், திருட்டுக்கள்ளும் சாராயமும் நல்ல ஆதாயம் தந்தன. இன்றும் தருகின்றன. அன்று ஆண்டுக்குச் சில ஆயிரம் இலாபம் சம்பாதித்தவர்கள், இன்று, கள்ள மதுவால் இலட்சக்கணக்கில் திரட்டிக்கொள்ள முடிகிறது. அப்படித் திரட்டியவர்களை, பெரிய மனிதர்களாக எங்கும் ஏற்றுக்கொள்ளும் அளவு வைத்திருக்கிறோம். இலட்சக் கணக்கில் சேர்த்த கள்ளுக்கடை 'கண்ட்ராக்டர்களைக்கூட, அக்காலச் சமுதாயம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/278&oldid=787082" இலிருந்து மீள்விக்கப்பட்டது