பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 239 வேதனைப்பட்டேன். மெல்ல மெல்லச் சேர்த்தவற்றில் பெரும் பாலானவை ஒரு சில மாதங்களில் அடகுக் கடைகளில் அடைக்கலம் புகுந்தன. இது எங்கோ இரண்டோர் இடங்களில் ஏற்பட்ட தீங்குகள் அல்ல. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைப் பாழாக்கிய பரிதாப நிகழ்ச்சிகள். எனவே, கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக, மதுவிலக்கை எடுக்க வேண்டாம். கள்ளுக்கடைகள் வழியாக வருவாய் அதிகமாகும் என்பது உறுதி. ஆனால் பண்டங்களை வாங்குவது படுத்துவிடும். விற்பனை வரி வழியாகப் பெறும் நிதி குறைந்துவிடும். அரசு, நிதிப் பெருக்கத்தை மட்டும் பெரிதாகக் கருதக்கூடாது. முப்பதாண்டுகளுக்கு மேலாக, மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததன் நேரடிப் பலன் - நல்ல பலன் - பல்லாயிரக்கணக்கான ஆதிதிராவிடர்கள் சொந்தத்தில் நிலம் வாங்க முடிந்தது. இலட்சக்கணக்கான ஆதிதிராவிட, வன்னிய மாணவ மாணவிகள் படிப்பில் பல்கலைக்கழகப் படிப்பையும் நெருங்கி முன்னேறி வருவதும் மதுவிலக்கின் நன்மை. கள்ளுக்கடை வருமானால், அவர்கள் வாழும் குடிசை தோறும் சண்டை சச்சரவு, தெருதோறும் குத்துவெட்டு, மாலை தோறும் வசையும் கூச்சலும் அடியும் உதையும் தாண்டவமாடும். ஏழைப் பிள்ளைகள் அந்நிலையில் படிக்க முடியுமா? முன்னேற முடியுமா? அரசு, மனிதர்களைக் காப்பதற்கும் வளர்ப்பதற்கும், அவர்கள் பெருமளவு மனிதர்களாகவே இருக்க உதவுவதற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். அப்படி இயங்கும் ஆட்சியே கருணையுள்ள ஆட்சி; நல்லாட்சி. 30. பித்தனின் சமுதாயச் சிந்தனைகள் குழந்தைத் திருமணக் கொடுமைகள் மக்கள் மாட்டுள்ள உயர்வு தாழ்வு, சாதி வேற்றுமை, சமயவேற்றுமை, பெண் அடிமை இவைகளைக் கடிந்து, சமரசம் கொள்வது இதன் முதல் நோக்கம் என்று வெளிப்படையாகப் பித்தன்' முதல் இதழில் அறிவித்தது. வனமலர்ச் சங்கம் என்றும் குறிக்கோளில் வழுவவில்லை. பொதுமக்களுக்குக் கேடானவை, எவ்வளவு தொன்மையானவை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/281&oldid=787086" இலிருந்து மீள்விக்கப்பட்டது