பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நினைவு அலைகள் இருப்பினும் அவற்றைக் கடியத் தவறவில்லை; எவ்வளவு புனிதமான மரபாகக் கருதப்பட்டாலும் அதைக் கண்டிக்க முன் வந்தது. நம் இந்திய நாடு பழம்பெரும் நாடு, இதன் சிறப்புகள் சில: குறைகளுக்குக் குறைவில்லை. குறைகளைச் சுட்டிக் காட்டிக் களையத் துரண்டுவது, நாட்டுப் பற்றுடையோரின் கடமையாகும். அறியாமை மிகுந்த நம் சமுதாயம் அலறித்துாற்றுமே என்று அஞ்சி, ஊமையாக இருப்போர் கோழைகள், நாட்டுப்பற்று அற்றவர்கள். ஊர் முழுவதும் பகைப்பதையும் பொருட்படுத்தாது, சமுதாய மாற்றத்திற்காகத் தெளிவாகக் குரல் கொடுப்போரே, மனிதர்கள். உலகில் வேறு எங்கும் காணமுடியாத சாதி வேற்றுமைகள், அவற்றின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள், அவை பெற்றெடுக்கும் அடக்குமுறைகள் இந்தியாவின் பெருநோய்கள். அதே போன்று, குழந்தைத் திருமணங்களும் குழந்தை விதவைகளும் இந்தியாவில் மட்டுமே காணும் பயங்கரக் கொடுமைகள்." பித்தன் முதல் மலரின் ஐந்தாவது இதழ், விபவ ஆண்டு பங்குனித் திங்களில் விரிந்தது. அது தாங்கிவந்த வேதனைப் புள்ளிவிவரங்களைப் பாருங்கள். 1921 ஆம் ஆண்டின் கணக்குப்படி நமது நாட்டில் இருக்கும் இளம் விதவைகளின் தொகையைக் கீழே தருகிறோம். வயது விதவையர் தொகை 1 ஆண்டு 497 1-2 ஆண்டு 494 2-3 ஆண்டு I257 3-4 ஆண்டு 2,537 4-5 ஆண்டு 6707 5 ஆண்டு 11892 5-10 ஆண்டு 850,37 IO-15 ஆண்டு 2,321.47 15-20 ஆண்டு I, 74,20,820 மேலே குறிக்கப்பட்டுள்ள விதவையர் எண்ணிக்கை எந்தக் கல் மனத்தையும் கரைக்கு மன்றோ? இந்தச் சிறு பெண்கள் உள்ளத்தில் நமக்குள் தோன்றும் எண்ணங்கள் உதயமாகின்றன. அவர்களுக்கும் ஆசையுளது. அவர்களை ஏன் மொக்கிலேயே வாடவிடவேண்டும்? 'திருமணம் என்னும் பீடத்தில் இவர்கள் பலியிடப்பட்டனர். 10 வயதுக்கு உட்பட்டவர்களை விதவை என்று எண்ணுவது பெரும் கொடுமையல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/282&oldid=787088" இலிருந்து மீள்விக்கப்பட்டது