பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 243 குழந்தை மணத்தைத் தடுக்க அல்லவா சட்டம் இருக்கிறது? அது என்ன ஆயிற்று? யாரும் பதில் கூறமாட்டார்கள். அப் பத்தாயிரம் குழந்தைகளின் தாய் தந்தையர்களுக்குப் பெற்றோர் என்னும் பெயர் பொருந்துமா? கசாப்புக் கடைக்காரன்கூட ஒரே வெட்டில் உயிரைப் போக்கி விடுகிறான். இக்கயவர்களோ, பச்சைக் குழந்தைகளை வாழ்நாள் முழுவதற்கும் சித்திரவதைக் குழியில் தள்ளுகிறார்கள். சமயக் குரவர்களோ அருளுக்காகக் காத்துக்கிடப்பவர்கள். இக்கொடுமைகளைப் பற்றிக்காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. அரசியல்வாதிக்கு ஒட்டுச்சீட்டு ஒன்றே குறி. அதை இழக்கக் கூடாதென்ற கவலையில், பேசா நோன்பு இருப்பார்கள். அனைத்திந்திய பெண்கள் சங்கம் என்ன செய்கிறது? மெல்ல எப்போதோ கூடி, அருமையான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவது உறுதி. 'பெட்டைப் புலம்பலும் முடியாத பெருநிலை இன்றைய நிலை. துருக்கியின் நல்வாய்ப்பு, கமால்பாட்சா தோன்றினார். இந்நூற்றாண்டின் முதல் வரை (தொடக்கம் வரை) ஐரோப்பாவின் நோயாளியாகக் கிடந்த துருக்கியை வலிமையுடைய நாடாக மாற்றிவிட்டார். துருக்கிய சமுதாயத்தை, நாகரிக மக்கள் சமுதாயமாக மாற்றி விட்டார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த கமால், செயற்கரிய செய்தார். இங்கே ஒரு கமால்பாட்சா தோன்றுவாரா? எப்போது தோன்றுவார்? 'சாதி உயர்வு தாழ்வு, குழந்தை மணம், பெண்ணடிமை ஆகியவற்றை அடியோடு ஒழிக்கக்கூடிய கமால்பாட்சாவின் இந்தியப் பதிப்பு எப்போது?’ என்று எண்ணி ஏங்குவதே நம்முடைய வேலையாகிவிட்டது. ஆளுக்கொரு காட்டுப் பூண்டையாவது, கல்லி எறிய முனைந்தால் இந்தியச் சமுதாயம் எண்ணற்ற கொடுமைகளில் நெளிந்து கொண்டிராது? பாரதியார் பாடலும் நாட்டுப்பற்றும் நான் கல்லூரியின் தொடக்க நிலை மாணவனாக இருந்தபோது, பாரதியாரின் தேசியக் கவிதைகளை அரசு பறிமுதல் செய்திருந்தது. அப்பாடல்களைப் பாடுவது, படிப்பது குற்றம். நான் வாழ்க்கையின் முதற்குற்றத்தை அப்போதே செய்தேன். நாட்டுப்பற்று மிகுந்த பெரியசாமித் துாரன், குட்டப்பாளையம் கு.க. பெரியசாமி, ஆர். சோமசுந்தரம் ஆகியோரிடமிருந்து, நான் பாரதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/285&oldid=787091" இலிருந்து மீள்விக்கப்பட்டது