பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நினைவு அலைகள் விடுதலைப் பாடல்களைக் கேட்டேன். அவற்றில் நெஞ்சைப் பறிகொடுத்தேன். பாரதியாரின், சுதந்திர தேவியின் துதி , சுதந்திரப் பெருமை", "சுதந்திர தாகம்', 'பாரத சமுதாயம்', 'தமிழ் ஆகிய பாடல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன; அவற்றை மனப்பாடம் செய்ய விரும்பினேன். எங்கள் விடுதிக்கு எதிரிலேயே பைகிராப்ட்ஸ் சாலையில் 'காதி பந்தர் - கதர்க்கடை நடந்தது. அங்கே, பறிமுதல் செய்யப்பட்ட தேசிய கீதங்கள் இரகசியமாகக் கிடைத்தன. அந்நூலை வாங்கினேன். விடுதி அறையில் ஒளித்து வைத்துக் கொண்டு படித்தேன்; பல பாடல்களை மனப்பாடம் செய்தேன். என்னை அறியாமலே, எனக்கு நானே பேருதவி செய்து கொண்டேன். பாரதியாரின் பாடல்களை மனப்பாடம் செய்தது, என்னுள் நாட்டுப்பற்றை முளைக்க வைத்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலத்தில் இளமைப்பருவத்தில் - ஒளித்து வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்ததால், பாரதி பாடல்கள் என் நெஞ்சில் ஆழப்பதிந்துவிட்டன. இன்றும், நாள்தோறும் மின்னி, என்னை வழிநடத்துகின்றன. ஆட்சியில் உள்ளோர், பறிமுதல் செய்யும் கருத்துகளில் பல, பொது மக்களுக்கு உண்மையில் நன்மையானவை, தேவையானவை என்பதற்குச் சான்றாவனபறிமுதல் செய்யப்பட்ட பாரதியின் தேசிய கவிதைகள் . பெரியாரும் திருக்குறளும் இவ்வேளை பிறிதொன்று நினைவுக்கு வருகிறது. என்னுடைய மாணவப் பருவத்தில் தாய்மொழியாம் தமிழ், பெஞ்சின் ஒரத்தில் ஒரளவு உட்கார்ந்திருந்தது. திருக்குறளின் அருமையும் பெருமையும் கல்வியாளருக்கே தெரியாது. எனவே திருக்குறளில் சில எப்போதோ ஒரு முறை, பாட நூலில் இடம்பெறும். பிற்காலம் போல், எல்லா வகுப்புப் பாடங்களிலும் திருக்குறள் சேர்க்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் கற்காத திருக்குறளை எனக்கும் பல நூறாயிரவருக்கும் ஆழப்பதிய வைத்தவர், ஐந்தாம் வகுப்புகூடத் தேர்ச்சி பெறாத பெரியார் ஈ. வெ. ரா. அவர்களே. இந்நூற்றாண்டின் முப்பதுகளின் கடைசி ஆண்டுகளில், பொதுமேடைதோறும் திருக்குறட் பாக்கள் இரண்டு மூன்றை ஒப்புவித்து, சாதாரண மக்களுக்கும் நம்முடைய அரிய கருவூலத்தைக் காட்டியவர் பெரியார் அவர்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/286&oldid=787094" இலிருந்து மீள்விக்கப்பட்டது