பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

одѣ, за вѣрьтаты 2ата» 245 அதனால் பொது மக்களிடையே திருக்குறளைப் படிக்கும் பழக்கம், ஒப்ப ைமழைபோல் பெருகிற்று நானும் அம்மழையில் நனைந்தேன். திருக்குறட் பாக்களை அடுத்தடுத்துப் படித்தேன். முதல் இரண்டு பால்களின் பாக்கள் பல, என் உணர்வில் இரண்டறக் கலந்தன. குழம்பிய போதெல்லாம் தெளிவுபடுத்தின; சோர்ந்த ஒவளைதோறும் தெம்பூட்டி நிமிர்த்தின; பச்சை விளக்கு காட்ட வேண்டிய இடங்களில் பச்சை விளக்கையும் சிவப்பு ஒளி காட்ட வேண்டிய இடங்களில் சிவப்பு ஒளியையும் காட்டி என்னை வழி நடத்துகின்றன. விரைவு இரயில் வண்டிகள் நமக்குத் தெரியும். அவை விரைந்து செல்ல, வளைந்து கொடுக்காத, சரியாத, உறுதியான, ஒரே சீரான தண்டவாளங்கள் முதல் தேவை. அவற்றைப் போதிய விரைவில் உந்தும் ஆற்றலும் தேவை. திருக்குறள் என் வாழ்க்கைக்குத் தண்டவாளங்களாக அமைந்தன. இன்றும் அப்படியே செயல்படுகின்றன. பாரதியின் பாடல்கள் உந்தாற்றலாகச் செயல்பட்டு என்னை முடுக்குகின்றன. இளமைப் பருவம் தாண்டிய பிறகு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல்கள் பலவும் என்னை இயக்கத் தொடங்கின. இன்னும் இயக்குகின்றன; நாளையும் இயக்கும். 'நிகழ்ச்சி நிரல் காட்டியானேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு புதிய பழக்கமொன்றைக் கற்றுக் கொண்டேன். அது என்ன? ஆங்கில நாளிதழ், வார இதழ், திங்கள் இதழ் ஆகியவற்றை நாள்தோறும் படித்தல். உயர்நிலைப்பள்ளிப் பருவத்தே பெரும்பாலும் தமிழ் இதழ்களைப் படிக்கவே வாய்ப்பு இருந்தது. விக்டோரியா மாணவர் விடுதியின் படிப்பகத்திற்கு அன்று சென்னையிலிருந்து வெளியான எல்லா ஆங்கிலச் செய்தித்தாள்களும் வந்தன. சில, உள்நாட்டு, வெளிநாட்டு, ஆங்கிலப் பருவ இதழ்களும் கிடைத்தன. இவற்றை - குறிப்பாக நாளிதழ்களைத் தவறாது படிக்கும் பழக்கம் என்னுள் வளர்ந்தது. செய்திகளைப் படிப்பதோடு நிற்க மாட்டேன். எல்லாச் செய்தித் தாள்களிலும் இன்று நடப்பவை , நாளை நடப்பவை என்னும் நிகழ்ச்சி அறிவிப்புப் பகுதியை விடாமல் படிப்பேன். எனக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளையும் கவனத்தில் வைத்திருப்பேன். நீதிபதி இராமேசன் குடும்பக் கட்டுப்பாடு பற்றி எங்கே பேசுகிறார்; சி.பி. சுப்பையா எங்கே அரசியல் முழக்கம் செய்கிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/287&oldid=787096" இலிருந்து மீள்விக்கப்பட்டது