பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 251 "மாணாக்கர்கள் எழுதுவதற்கு மை அவசியம். இதற்கு அவர்கள் உலாவப் போகும்போது வழியிலுள்ள சில மரத்தின் காய்களைக் கொண்டு மை செய்து கொள்கிறார்கள். அந்தக் காய்களைப் பறிக்கும்போது தங்கள் கைகள் அழுக்காகி விடுகின்றன. அவ்வழுக்கைப் போக்க சவுக்காரம் (சோப்) அவசியம். எனவே, பல பள்ளிக்கூடங்களில் சவுக்காரம் செய்யும் தொழிலும் கற்பிக்கப்படுகிறது. "ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு சேவிங்ஸ் பாங்கியும் கூட்டுறவு சங்கமும் இருக்கின்றன. 'எல்லா மாணாக்கர்களும் தம் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பொருள் சேர்க்கத் தினந்தோறும் தோட்ட வேலை முதலிய சிறு வேலைகளைச் செய்கின்றனர். தம் சொற்பச் சம்பளத்தில் இருந்து ஆசிரியர்களும் பள்ளிக்கூட நிதிக்கு உதவுகிறார்கள். எளிய பள்ளிக்கூடமாயிருந்தால் மாணாக்கர் களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வேண்டுவனவற்றை உதவுகிறார்கள்.' 'பயனுள்ள செயல்வழிக் கல்வி' என்னும் வார்தா கல்விமுறை உருப்பெறுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னரே மெக்சிகோநாட்டில் அக்கருத்து உருப்பெற்றது; செயல்பட்டது. வெறும் ஏட்டுப்படிப்பு கல்வியாகாது. இது சத்து நீங்கிய சக்கையாகும். பயனுள்ள உற்பத்திச் செயல்பாடே சத்தாகும். அந்தச் சத்தினைச் சேர்க்க முயன்ற ஆதாரக் கல்வி'யில் வைதீக மனப்போக்கு நுழைந்தது:ஆட்சி செய்தது; எரிச்சல் ஊட்டிற்று: கல்வி மடாதிபதிகளை உருவாக்க முயன்றது; முறிந்தது. சமயக் கட்டுப்பாடுகள், சமயங்களின் உயிர்களைப் பறித்தது போன்று நூற்பு நூற்பு என்ற வைதீகப் போக்கு நல்ல ஆதாரக் கல்வியைக் கழுத்தை முறித்துக் கொன்று விட்டது. என் இதயத்தில் வீழ்ந்த விதை செயல் வழிக்கல்வி என்பது இயற்கையோடு இணைந்த நல்ல கல்வி முறையாகும். செயல்களை, நடைமுறைகளைச் சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு, எல்லா நில்ைகளிலும் எல்லோர்க்கும் செயல்பாட்டினில், கைவேலைகளில், எளிய தொழில்களில் பயிற்சி கொடுக்கும்போதே, இந்தியக் கல்வி பயனுள்ளதாக மாறும். ஆண்டைக்கு மாடு மேய்த்து, வழிப்போக்கருக்குச் சுமை துரக்கிப் பாழாகிப் போகும் பிள்ளைகளுக்கு, பள்ளிகளிலே ஆதாயமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/293&oldid=787108" இலிருந்து மீள்விக்கப்பட்டது