பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நினைவு அலைகள் வேலைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்; முயன்றால் இதை வெற்றிகரமாகச் செய்யவும் முடியும். இப்படிச் சிந்திக்க யார் உள்ளார். காந்தியைச் சுட்டு வீழ்த்தி விட்டோம். சுற்றியிருந்த அணுக்கத் தொண்டர்கள் பெரியவர்களாகி விட்டார்கள். பொதுமக்களுக்காகக் குரல் கொடுக்க எவர் பிறப்பாரோ? மெக்சிகோ நாட்டுப் பெற்றோர்கள் பள்ளிகளின் தேவைகளுக்கு உதவியது போல, தமிழ் நாட்டுப் பெற்றோர்களும் நம் பள்ளிகளுக்குத் தாராளமாக உதவி, சீரமைக்க வேண்டும். இக்கருத்து என் நெஞ்சின் ஆழத்தில் எனக்கும் தெரியாமல் புதைந்து கிடந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அக்கருத்து முத்து வெளி வந்தது. பள்ளிச் சீரமைப்பு இயக்கமாக வளர்ந்தது. பத்தாண்டுக் காலம் பல்லாயிரக் கணக்கான பள்ளிகளை, பொது மக்களின் உதவிகளுடன் சீராக்க முடிந்தது. தன்னுதவியில் தமிழ்ச் சமுதாயம் மெக்சிகோ நாட்டுச் சமுதாயத்திற்கு இளைத்ததல்ல என்பது மெய்யாயிற்று. பொது மக்களுக்கான எந்த நடவடிக்கையும் திட்டமும், பொது மக்களுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறும்பொதே வெற்றி பெறும். ஒத்துழைப்பும் ஆதரவும் அவர்கள் அத்தகைய திட்டங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து மலரும். பள்ளிச் சீரமைப்பு இயக்கம் புரிதலைப் பரப்பிற்று. பள்ளிக் சீரமைப்பு இயக்கம் முழுமையாகத் தொடர்ந்திருந்தால், தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்கள் கவர்ச்சி நிலையங்களாக விளங்கா விட்டாலும், இருந்து கற்பதற்கேற்ற இடங்களாக மாறியிருக்கும். ஆனால் கல்விப் பொறுப்பு யானைகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்தது. தமிழ்நாட்டில் புதிய பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1929 இல் இருந்து நடக்கிறது. அப்பல்கலைக் கழகத்தை நிறுவியதைப் பாராட்டி வரவேற்றுப் பித்தன் எழுதிற்று. அதே நேரத்தில் குறைபட்டுக் கொண்டது. பாராட்டும் குறையும் பாருங்கள். 'இப்பல்கலைக் கழகம் தமிழ்நாட்டிற்குப் பெரும் பயன் விளை விக்கும். அதில் தேசிய மணம் கமழும். தமிழ்த்தாய், மூவேந்தர் முடிமீதேறிச் செருக்குற்று இருந்த நிலையை மீண்டும் அடைவாள் என்று எண்ணி இறும்பூ தெய்திக் கொண்டிருந்தோம்; இருக்கிறோம். 'ஆனால் அதன் வைஸ்சான்ஸ்லர் தேர்வுகளே, எம் இறும்பூதின் சிண்டைப் பிடித்துச் சிறிது ஆட்டிவிட்டன. இன்னும் பார்ப்போம். ஆம்: இன்னும் பார்ப்போம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/294&oldid=787110" இலிருந்து மீள்விக்கப்பட்டது