பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நினைவு அலைகள் 'மூத்தோர்களைவிட இளைஞர்களே, கல்யான விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் விவாகம் செய்து கொள்ளவும் முக்கியமாகப் படிக்கும் பொழுது விவாகம் செய்து கொள்ளவும் மறுக்க வேண்டும். எப்படியாவது கல்யாணச் செலவுகளைச் சுருக்க முற்பட வேண்டும். 'மதச்சடங்குகளுக்குப் பத்து ரூபாய்க்கு மேல் செலவழிக்கக் கூடாது. இச்சடங்குகளைத் தவிர மற்றவையெல்லாம் அநாவசிய மென்று கருதி ஒதுக்கப்படல் வேண்டும். 'நாட்டிலுள்ள படித்த இளைஞர்கள் முக்கியமாகப் பணக்காரப் பிள்ளைகள், தங்கள் காரணமாகச் செய்யப்படும் அநாவசியச் செலவு களை நிறுத்த உறுதிகொண்டால் தேசத்தின் பணம் வீணே செலவாகாது." சஞ்சீவியான கருத்து; இதைக் காந்தியவாதிகளும் செயல் படுத்தவில்லை; பெரியாரைப் பின்பற்றுபவர்களும் பின்பற்றவில்லை. இரு சாராரும் வெகுளுவார்கள். என் செய்ய? எப்போது மாற்றம்? எப்போது வாழ்வு? பித்தனில் சிறுகதை தொழுவம் காத்த நாய்' என்னும் தலைப்பில் சிறுகதை ஒன்றைப் 'பித்தன் சுக்கில ஆண்டு ஆடித் திங்களில் வெளியிட்டது. அக்கதை நம் சமுதாயத்தின் அவல நிலையைக் கிண்டல் செய்கிறது; கசப்பான உண்மையை, இலக்கியச் சுவையோடு வெளியிடுகிறது. குத்துசி குருசாமியின் கட்டுரைச் சாயல் அதில் முளைவிட்டிருந்தது. அந்நாளிலேயே - 1929லேயே - நெஞ்சில் தைக்க வைக்கும் எழுத்தாளராக விளங்கிய குத்துசி குருசாமியார் அதை எழுதவில்லை என்பதை நான் அறிவேன். மாட்டுத் தொழுவத்தில் புல்லின்மேல் படுத்திருந்த நாய், உழுதுவிட்டுக்களைத்து வந்த மாடு புல்லைத் தின்னாதபடி தடுக்கிறது. நாய்க்கும் எருதுக்கும் இடையே உரையாடல் நிகழ்வதாகக் கற்பனை. அதிலே சில பகுதிகளைத் தருகிறேன். நாய் : இறைவரால் புனிதமடையும் கோயில் சண்டாளரால் அசுத்தமடைந்துவிடுமா? எருது : அசுத்தமடையாது. நாய் பின் ஏன் அவர்களைக் கோயிலுக்குள் நுழையவிடுவதில்லை; எருது வேறு இரகசியமான காரணங்கள் இருக்கலாம். -- நாய் அதே இரகசியமான காரணங்களால்தான் உன்னையும் தொழுவத்துக்குள் விட மறுக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/296&oldid=787114" இலிருந்து மீள்விக்கப்பட்டது