பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 255 மற்றோர் பகுதி: நாய் : உழைப்பதற்கே உங்களைப் படைத்தார்; பிழைப்பதற்கே எங்களைப படைததாா. எருது : ஐயரே, ஒரு சந்தேகம் கேட்கிறேன். கோபித்துக் கொள்ளா தீர்கள். படைத்தது எதற்காகவிருந்தாலும் உங்கள் மனமே உங்களை வாட்டவில்லையா? நாய் : எதற்காக வாட்டும்? தாறுமாறாய்ச் செய்தால் தொழில் கெடாதா? இன்று முதலிலிருந்து நீ வேண்டுமானால் குரைக்கிறாயா? எருது : இல்லை யில்லை. நீர்தான் எஜமானரோடு, நீரும் எஜமானர் என்று நினைப் பீர். எந்த மேடையிலும் ஏறுவிiர், பிறகு வேண்டியபடி யெல்லாம் குரைப்பீர். எனக்கு மேடையிலேறும் வழக்கமும் இல்லை. அடங்கியிருப்பதே எனக்கு இயல்பு. நாய் ! நீ மூடனாக இருப்பதாகக் கருதினேன். நீ துஷ்டனாகவும் இருக்கிறாய். கலியின் கொடுமையால் கண்டபடி பேசுகிறாய். இந்தக் கதையின் முடிவு என்ன? செளகர்யத்திற்காக வேதம் படைத்து, நாகரிகம் படைத்த நாய்களோடு மன்றாடுவதைப் பார்க்கிலும் வேற்றுநாடுகளுக்குச் சென்று விடுவதே நமக்குச் செளகரியம் என்று கூறி எருது எழுந்து சென்று விட்டது. எண்ணற்ற தமிழர் முற்காலத்தில் திக்குத் தெரியாத பல நாடுகளுக்குக் கூலிகளாகக் குடியேற நேர்ந்தது எதனால்? நம் சமுதாயக் கொடுமையால்; அது பெற்று எடுத்த பயங்கர வறுமையின் இழிவால். இவற்றைத் துணிச்சலாக, ஐம்பது ஆண்டுகளுக்குமுன் படம் பிடித்துக் காட்டிய எழுத்தாளரும், அதை வெளியிட்ட பித்தன்' ஆசிரியர் குழுவினரும், அன்றும் இந்து சமயப் பக்தர்கள்: இன்றும் இந்து சமயக் காவலர்கள். அன்றும் இன்றும் வகுப்புப் பகையை அண்டவிடாதவர்கள் என்பதை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 32. பித்தனின் இளைஞர்கள் பெரியவர்களைக் கவர்பவை, பொது மக்களைக் கவர்தல் அரிது. நம்மைப் போன்று அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயங் களில் பொதுமக்கள் சிந்தை முழுவதும் பிழைப்பைப் பற்றியே. எவ்விதப் புறக் கவர்ச்சியும் இல்லாத பித்தன், உள்ளுணர்வுச் சிறப்பு மட்டுமே கொண்டிருந்த பித்தன், இராஜாஜியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது வியப்பல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/297&oldid=787116" இலிருந்து மீள்விக்கப்பட்டது