பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நினைவு அலைகள் பொதுமக்களிடம் அது ஒரளவு செல்வாக்குப் பெற்றிருந்தது. வனமலர்ச் சங்கத்தின் எல்லாக் கிளைகளிலுமாக நூற்றைம்பது உறுப்பினர்கள் இருந்தார்கள். இவர்கள் நீங்கலாகப் பணங்கட்டிப் பித்தனை வரவழைத்தவர்கள். முந்நூறு பேர்கள் ஆவார்கள். மொத்தம் நானுற்று ஐம்பது ஆதரவாளர்கள் என்பது அக்காலத்திற்குப் பெரிய ஆதரவு. பித்தனிடம் பித்துக் கொள்வதற்கும் காரணம் வேண்டும. பித்தனுடைய தமிழ் உணர்வு, நாட்டுப்பற்று ஆகியவை மட்டும் காரணமல்ல. பழமைப் பூச்சாண்டிகளுக்கு அஞ்சாத முற்போக்குக் கருத்துகளைத் தாங்கி வந்ததும் காரணமாகும். இதோ ஓர் எடுத்துக்காட்டு தற்காலம் பெண்கள் அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்காமையே நாட்டின் தாழ்மைக்கு அறிகுறியாகும். 'நமது நாட்டில் பெண்களை மிகவும் தாழ்மையாய் நடத்தி வருகின்றனர். அதை நாம் கண்டிக்க வேண்டும். மேலும் அவர்களுக்குச் சம உரிமை ஈதல் மிகவும் அத்தியாவசியம். பால்ய விவாகம் ஒங்க ஒட்டாது தடுத்தலும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும் நமது முதற்கடனாகக் கொள்ள வேண்டும். தாயறிவு மகனறிவு ஆகுமாதலின் அவர்களை அறிவிற் சிறந்தவராக்க முயல வேண்டும்.' -இப்படி, திரு. சுப்பையன் என்பவர், திருச்சிக் கிளையில் சுக்கிலவாண்டு ஆடித் திங்கள் இருபதாம் நாள் பேச அதைப் பித்தன் வெளியிட்டது. இன்றைக்கும் தங்களுக்குக் கிடைக்கும் பாராட்டு குறைந்துவிடும் என்று அஞ்சி, இவ்விஷயங்களைத் தொடாமல் நாகரிகமாக விலகிப்போகும் பெரியவர்கள் உள்ளார்கள். o பித்தனின் இளைஞர்களோ துணிந்து பேசினார்கள். ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, முற்போக்குச் சிந்தனையை வெளி யிட்டார்கள். சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; செய்தல் அரிதாம். அரிய செயலையும் செய்து காட்டினார், வனமலர்ச் சங்க அண்ணன் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/298&oldid=787118" இலிருந்து மீள்விக்கப்பட்டது