பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நினைவு அலைகள் இப்படி ஆதரவு தந்த சாத்துார் சுப்பிரமணிய நாயனார் ஊர்பேர் தெரியாத மனிதர்அல்லர். அக்காலத்தில் பாண்டிய மண்டலத்தில் புகழ் பெற்றிருந்தவர். வழக்குரைஞர் தொழிலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டி ருந்தபோது, காந்தியடிகளாரிடம் நெஞ்சைப் பறிகொடுத்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். வழக்காடும் தொழிலை விட்டுவிட்டார். நாட்டுத் தொண்டில் குதித்து விட்டார். 1921 இல் ஒராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். இவருடன் இவர் மூத்த மகன் சண்முகசுந்தரமும் சிறை சென்றார். அக்காலத்தில், வடக்கே மோதிலாலும் நேருவும், தந்தையும் மகனுமாகச் சிறை சென்ற நிகழ்ச்சிக்கு இணையாகத் தெற்கே உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியைப் பேசிப் பெருமைப் பட்டனர். காமராசர் அரசியலில் சத்தியமூர்த்தியைத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, இவரைத்தான் தலைவராகக் கொண்டு செயல்பட்டார். எனினும் இவரோ இவர் மகனோஅதைச் சொல்லி எதுவும் சம்பாதித்துக் கொள்ளவில்லை. முதல் தலைமுறைக் காந்தியவாதிகள் பலருக்குள்ள தனிச்சிறப்பு இது எனலாம். நேர்ந்து விட்டதற்குக் காரணம் கூறும் தன்மையில் செயல்படாத, கொள்கைக்கு உண்மையான மனிதராக விளங்கும் திரு. கோதண்டராமன், உண்டாட்டின் இறுதியில், 'இத்தகைய கலப்பு மனங்கள் நமக்குள் சர்வ சாதாரணமாக நடைபெற வேண்டும். கலப்பு மணம் நடப்பதில் நமக்கு ஒருவித ஆச்சரியமும் தோன்றக்கூடாது' என்றார். இதைச் சொல்லி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. கோதண்டராமனின் தம்பி கிருஷ்ணன், கமலா என்னும் விதவையைத் திருமணம் செய்து மேலும் புரட்சி செய்தார் என்பதையும், அதற்குச் சாத்தூர் சுப்பிரமணிய நாயனார் இசைவளித்து வாழ்த்தினார் என்பதையும், இத்திருமணம் மிக எளிய முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற்றது என்பதையும் இங்கேயே குறிப்பிட விரும்புகிறேன். வனமலர்ச் சங்கம் அளித்த வாழ்த்துப் பத்திரம்! திருவாளர் அர். கோதண்டராமன் பி. ஏ.பி.எல். அவர்களுக்கும் பூரீமதி ருக்குமணி தேவியவர்களுக்கும் நடந்த கலப்புத் திருமணத்தை முன்னிட்டு வனமலர்ச் சங்கத்தாரால் வாசித்துக் கொடுக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/300&oldid=787126" இலிருந்து மீள்விக்கப்பட்டது