பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 259 வாழ்த்துப் பத்திரம் மாண்புமிக்க மணமக்காள்! தங்கள், இல்வாழ்க்கை என்றென்றைக்கும் இன்பவாழ்க்கையாகுக! நம் நாட்டின் தற்கால நிலையில் உண்மைக் காதல் மணத்திற்கு இன்னல்கள் பல இருந்தும் அவைகளையெல்லாம் ஒரு சிறிதும் பொருட்படுத்தாது மிக்க தைரியத்துடன் முன் வந்து காதல் மணத்தைக் கைக்கொண்ட தாங்கள் இயற்கை யன்னையின் இன்பத்தை இடையறாது பருகுவீர்களாக மதிமிகு மங்கையர் திலகமே! பெண்களின் சுதந்திர உணர்ச்சியற்ற நம் நாட்டில் தங்களைப் போன்ற வீரப் பெண்ணணங்குகள் தோன்றல் அவசியம். உண்மைக் காதலிதென இளைஞர்களுக்கு எடுத்துணர்த்திய உங்கள் வீரச் செய்கை எங்களால் உணர வேண்டியதென்பதை யாம் மறப்போ மல்லேம். அன்புசால் ஐயா! 'மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். என்னும் வள்ளுவர் வாக்கிற்கிலக்காய், பெருங்குடி மரபிற் பிறந்து, தேசப் பணியைச் சிரமேற் கொண்டுழைத்த ஒர் உத்தமரது குமாரராய்த் தலைசிறந்து விளங்கும் தங்களது அன்பு மகனின் மணத்தினை ஆர்வத்தோடு வாழ்த்தும் இச்சந்தர்ப்பம் எங்கட்குக் கிடைத்தமை பற்றி மகிழ்ச்சிப் பெருக்கடைகின்றோம். செயற்கரிய செய்வர் பெரியார் என்னும் நீதிக்கிணங்க, ஒர் அரும்பெரும் காரியத்தைச் செய்திருக் கிறீர்கள். இத்தகைய மணங்கள் சர்வ சாதாரணமாக வரும் நாள்கள் எந்நாள்களோ என்று அதிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அத்தகைய மணங்களுக்குத் தாங்கள் ஒர் முன் மாதிரியாக இருந்ததைப் பற்றி நாங்கள் தங்களை முழுமனத்துடன் வாழ்த்துகின்றோம். மேலும் மக்கள் சமரசம்' என்ற நம் சங்க நோக்கத்தை இம்மணத்தின் மூலமாய்ச் செய்கையில், முதலில், நிறைவேற்றியவரும் தாங்களே! அன்பர் நீவிர் வாழ்க! தாய் மொழிப் பற்றும், சர்வ சமய அன்பும், சகோதரப் பான்மையும், சுயேச்சை இன்பமும், பரந்த நோக்கமும், விரிந்த அறிவும் கொண்ட தாங்கள் பொதுஜன நன்மைக்கு என்றும் உழைப்பீர்களென்ற (Մ (ԼՔ நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றோம். வனமலர்ச் சங்கத்தார் - சு. கோதண்டராமன் - ருக்குமணிதேவி திருமணம் 1929 சூன் மாதத்தில் நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/301&oldid=787128" இலிருந்து மீள்விக்கப்பட்டது