பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26O நினைவு அலைகள் சாதிக் கொடிகளைக் கத்தரிப்போம் எப்போதோ, எங்கோ ஓரிருவர் கலப்புமணம் செய்துகொண்டிருந்த தற்குப் பதில், பல விடங்களில் பலரும் கலப்பு மணம் செய்து கொள்ளும் நல்ல சூழ்நிலையைச் சுயமரியாதை இயக்கம் தொடக்க காலத்தில் உருவாக்கியது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திறந்து விடப்பட்ட சமத்துவ நீரோடை காலப் போக்கில், பேராறாகி, வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் என்று மாணவப் பருவத்தில் எதிர்பார்த்தேன். ஒடை சிற்றாறாகியதைக் கண்டு மகிழ்ந்தேன். எதிர்பாராத அளவுக்குப் பேராறாகும் நாள் எந்நாளோ என்று இன்றும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறேன். இந்தியர் என்னும் உணர்வு நம்மில் இரண்டறக் கலந்து விட்டதா? இல்லை. வெளிச்சம் போடவேண்டிய நேரங்களில் பூசிக்கொள்ளும் மேல் பூச்சை ஒப்பவே, இந்தியர் என்று, வெளிச்சம் போட்டுக் கொள்கிறோம். தொலையட்டும், தமிழர் என்னும் உணர்வாகிலும் நம் மூச்சாகிவிட்டதா? அதுவும் பவுடர் பளபளப்பாகவே இருக்கிறது. ஏன்? சாதி உணர்வு கரைந்தபாடில்லை. நாட்டுப்பற்று', இனப்பற்று', மொழிப்பற்று என்று கொதிப்பேற முழங்கிவிட்டு, அத்திரைகளின் மறைவில், உட்சாதிப் பற்றை வளர்ப்பது, ஆதாயமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் ஒரு பக்கம் சாதிவெறியை வெளிப்படையாக இல்லாவிடினும் மறைமுகமாக - நெய்யூற்றி வளர்ப்பது ஆயிரந்தேள்கள் கொட்டுவதுபோல் குடைகிறது. அரசியல்வாதிகளைப் போன்று பல பெரிய அதிகாரிகளும் உட்சாதிப் பிரிவுகளைப் பாதுகாக்கவே பிறவி எடுத்ததாகக் கருதுகிறார்கள். தமிழர் நலனுக்காகப் பதவியில் இருப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தன் சாதி அலுவலர்களாகச் செயல்படுவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. இவை நல்ல அறிகுறிகள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுக் காட்டையும் அழித்துவிடலாம்: இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காட்டையும் கழனியாக்கி விடலாம். எப்போது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/302&oldid=787130" இலிருந்து மீள்விக்கப்பட்டது