பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ.து. சுந்தரவடிவேலு 261 போதிய எண்ணிக்கையினர் பாடுபட்டால்; போதிய காலம் பாடுபட்டால். 'யாருக்கு மணிமுடி? யாருக்கு விருது? என்பதை எண்ணிச் சோராமல், தொடர்ந்து ஆர்வத்தோடு முயன்றால்: தெரிந்த கருவிகளையெல்லாம் கொண்டு நிலத்தைத் திருத்தினால். இத்தலைமுறை இளைஞர்களுக்கு இவற்றைச் சொல்லுவார் யாருமில்லை. 'ஒரே வீச்சில், ஒரே குண்டில், காடு முழுவதையும் அழிக்க முடியும். அந்தக் குண்டை உருவாக்க முடியும்; அதில் முனைந்துள்ளோம்: அதைப்பற்றி மட்டுமே பேசுங்கள். வேறொன்றையும் சிந்திக்காதீர்கள்; உரைக்காதீர்கள் என்பது ஒரு போக்கு. போர்க்களத்தில் இருந்தால் இது பொருத்தம். இன்றோ? கண் எதிரே தடுக்கி விழுபவனைத் தூக்கி நிறுத்தாமல், விழாத நிலையைக் காட்ட ஒடுவதுபோல் ஆகும். சிந்தனையோட்டமும் செயல்துடிப்பும் உள்ள இளைஞர்கள் இப்போக்கால் ஈர்க்கப்படுகிறார்கள். கூட்டம் சிறியது. பெரிய கூட்டம் எது? இரண்டும் கெட்டான் கூட்டம். தமக்கு அப்பால் எவ்வித இலட்சியமும் இல்லாத இக்கூட்டம், நடப்பது நடக்கட்டும்' என்று காற்றடித்த பக்கம் சாய்கிறது. மற்றோர் பிரிவு உண்டு. இப்பிரிவு இளைஞர்கள், இலட்சியவாதி களைப் போன்று சிறிய எண்ணிக்கையினர் அல்லர்; மிதக்கும் கூட்டத்தைப் போன்று ஏராளமானவர்களும் அல்லர். நம் பொது வாழ்க்கை முன்னணியினரும் எழுத்துலகத் தாரகைகளும் அள்ளி வீசும் கொச்சைகளை, கவர்ச்சிகளை, எச்சில்களை வாங்கிக் கொள்ளக் காத்து இருப்போர். மெய்யான இலட்சியவாதிகளாக உள்ள இளைஞர்கள், நிலாவுக்குத் தாவிச் செல்லக்கூடிய நுட்பப் பொறியை உருவாக்கி அனுப்புவதற்கு ஆயிரம் ஆயிரம் சின்னச் சின்ன', 'புகழ் ஈட்டித் தராத", வேலைகள் நடந்தாக வேண்டுமென்பதை உணர்தல் நல்லது. பெரிய, நல்ல இலட்சியத்தை நோக்கி விரைவதற்கும் உறுதியான அடித்தளம் வேண்டும். வழியில் மண்டிக்கிடக்கும் நச்சுக்கொடிகளை அழித்துக்கொண்டே நடக்கவேண்டிய நிலைகள் இருக்கும். அவை அனைத்தையும் தாண்டியபடியே தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணாமல், கத்தரித்துக்கொண்டு முன்னேற ஆயத்தமாக வேண்டும். சாதிக்கொடிகளைக் கத்தரித்தல், புது உலகச் சிறு வழிக்குத் துணை என்பதை மட்டும் நினைவுறுத்தி, வலியுறுத்தி, மேலே செல்லுகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/303&oldid=787132" இலிருந்து மீள்விக்கப்பட்டது