பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நினைவு அலைகள் திரு. கோதண்டராமனின் திருமணம் எழுப்பிய எண்ண அலைகள் நெடுந்துாரம் தள்ளிக்கொண்டு வந்து ஒதுக்கிவிட்டது. மீண்டும் மாநிலக் கல்லூரிக்குப் போவோம். ஆண்மை நிறைந்த மாணவர்கள் பித்தன் வட்டத்தைச் சேர்ந்த நாங்கள் 'இளந்துறவிகள்' என்றோ, தூக்குமேடைக்குச் செல்லத் துடிக்கும் பகவத்சிங்குகள் என்றோ, வெள்ளைக் கைதிகளை நடத்தும் முறைவேறு. இந்தியக் கைதிகளை நடத்தும் முறைவேறு என்னும் இனவேற்றுமை முறையை எதிர்த்துப் பட்டினி கிடந்த யதீந்திர தாஸ்கள் என்றோ தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். நாங்கள் முற்போக்குக் கருத்துடைய உண்மையான இளைஞர்கள். உள்ளத்தில் பட்டதைப் பட்டபடியே எழுதியவர்கள்: பேசியவர்கள்: சமயம் வாய்த்தபோது செயல்படுத்தியவர்கள். மற்றபடி மற்ற மாணவர்களைப் போலவே நாக்குச் சுவை பெற்றிருந்தோம். எந்த ஒட்டலில் என்ன பலகாரம் தனிச் சிறப்புடையது? அது என்றென்றைக்குக் கிடைக்கும் என்பது தெரியும். பலவேளை, சிற்றுண்டி தின்பதில் ஒரு கை பார்த்திருக்கிறோம். பொழுதுபோக்கு 'இரும்பு வாராவதி யிலிருந்து, சாந்தோம் முனைவரை, மாலை தோறும் உலாவி வருவது எங்கள் பொழுதுபோக்கு. அவ்வேளை நாங்கள் பெற்றது உடற்பயிற்சி மட்டுமல்ல. வகை வகையான ஆண்கள் பெண்கள் எங்கள் கண்களைக் கவர்வார்கள். அன்றைய சென்னைக் கடற்கரையில், இப்போதுள்ள கார் நெரிசல் இல்லை. இருப்பினும் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைவரை நீளத்தில் கார்கள் நிற்கும். இடையிடையே கோச் வண்டிகள் இடம் பிடித்துக் கொள்ளும். பெரிய மனிதர்களுடைய கார்களின் எண்களை நினைவில் வைத்திருப்பதில் எங்களுக்குள் போட்டி ஏற்படும். இதில் என் சாதனை சிறப்பாயிருக்கும். பாரிஸ்டர் எத்திராஜ் எம்எஸ் 100 எண்ணுள்ள ரோல்ஸ்ராயில் வருவார். 'புன்னகைக் குறும்பர் என்பது நாங்கள் அவருக்கு இட்ட குறும்புப் பெயர். அவரைக் கடற்கரையில் காணாது நாங்கள் விடுதி திரும்புவது அரிது. அவரைக் காண்பதில் எங்களுக்குப் பூரிப்பு. தமிழர், சிறந்த வழக்கறிஞராக இருப்பதில் பூரிப்பு. எழுப்பும் ஒலியிலிருந்து இன்ன கார் வருகிறது என்று சொல்வதில் போட்டி இருக்கும். இவ்விளையாட்டிலும் நான் சோடையல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/304&oldid=787134" இலிருந்து மீள்விக்கப்பட்டது