பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு - 265 வாடகை ஆறு ரூபாய் சிப்பந்திச் செலவு, மின்கட்டணம் ஆகியவை மாதம் எட்டு ரூபாய் ஆகும். மொத்தத்தில் மாதத்திற்கு முப்பத்திரண்டு - முப்பத்தி மூன்று ரூபாய்கள் செலவாகும். இதைத்தவிரக் கைச்செலவிற்குப் பத்து ரூபாய்கள். சாப்பாட்டிற்கும் சிற்றுண்டிக்கும் விருந்தினர்களை அழைக்கலாம். சிற்றுண்டிக்கு நாலனா; சாப்பாட்டிற்கு ஆறு =9/ Gботт. பண்டிகைகளின்போது நடக்கும் விருந்துகளுக்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டும். என் விருந்தாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லப் பெருகிற்று. பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர், பண்டிதர் மணி திருநாவுக்கரசு முதலியார், பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார் ஆகியோர், விடுதி விருந்துகளுக்கு வந்து என்னைச் சிறப்பித்தார்கள். அக்காலத்தில் எம்.ஏ. பட்டம் பெறாத தமிழாசிரியராக இருந்த திரு. ஏ.சி. செட்டியார் ஒரு முறை அவருடைய நெருங்கிய நண்பரும் என் வழிகாட்டியுமாக இருந்த எஸ்.எஸ். அருணகிரிநாதரோடு விருந்திற்கு வந்து பெருமைப்படுத்தினார். இவர்களுடைய தொடர்பு என் தமிழ்ப்பற்றிற்கு எருவாயிற்று. திங்கள்தோறும் நான் செலுத்திய விருந்தாளிக் கட்டணம் அதிகமாகிக் கொண்டே இருந்ததால், விடுதிக் காப்பாளருக்கு அச்சமும் ஏற்பட்டது. அதிகப்படியான விருந்தாளிகளை அழைக்கிறேனென்று என் தந்தைக்கு எழுதினார். தந்தை என்னைக் காண விடுதிக்கு வந்தார். யார் யார் விருந்தாளிகளாக வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். நண்பர்கள் - நல்லவர்களே - விருந்தாளிகளாக வந்ததைப் புரிந்துகொண்டார். அழைப்புகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்லவில்லை. மாறாக, 'நட்புச் செல்வம் பெறற்கரியது; பலவகையினரோடும் நட்பை வளர்த்துக்கொள். உண்டால் தின்றால்தான் உறவு. தாராள விருந்தோம்பல் குற்றமல்ல; கெடுதல் செய்யாத செலவு என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார். என் தந்தை விடுதிக்காப்பாளரைக் கண்டார். நான் எத்தனை விருந்தாளிகளை அழைத்தாலும் அனுமதிக்கும்படி சொல்லிவிட்டார். அப்புறம் கேட்பானேன்? சிறப்பு விருந்துகளுக்கு ஆறு நண்பர்கள் வரை அழைப்பேன். எனது கத்பெருமையைத் தள்ளிவிடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/307&oldid=787142" இலிருந்து மீள்விக்கப்பட்டது