பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ᏮᏮ நினைவு அலைகள் என் விடுதிக் காப்பாளர்கள் நான், இரு விடுதிக் காப்பாளர்களின் பாதுகாப்பில் இருந்தேன். விடுதியில் சேர்ந்தபோது, திரு. எஸ்.ஈ. அரங்கநாதம் காப்பாளராக இருந்தார். அவருடைய பெயரைக் கண்டு ஏமாற வேண்டாம். அவர் இந்துவல்ல; கிறுத்துவர்; தோற்றத்தில் நெடுமால்; தன்மையில் மிக நல்லவர். நான் விடுதியில் சேர்ந்த ஆண்டு முழுவதும்கூட, அவர் காப்பாளராக இருக்கவில்லை. ஏன்? மாணவர்களாகிய நாங்கள் விரட்டிவிட்டோமா? இல்லை. அக்காலத்தில் மாணவர்களும் அதிகப்படியாக, கருமமே கண்ணாயிருந்தார்கள். பேராசிரியர்களும் கொதிதாளும் தானியங்களாக இருந்தார்கள். திரு. எஸ். ஈ. அரங்கநாதம் காப்பாளராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வருகிறது. மேல் வகுப்பு மாணவர்களின் தலைவர்கள் ஒரு கோரிக்கை மனுவை ஆயத்தஞ் செய்தார்கள். விடுதியில் உடற்பயிற்சிக்காக மூடு அரங்கம் கட்ட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. பலரையும் சேர்த்துக்கொண்டு பேட்டி காணச் சென்றார்கள். அக்கோரிக்கை மனுவைக் கொடுத்தார்கள். காப்பாளர் மனுவை, ஒரெழுத்தும் விடாமல் படித்தார். "எஃகு போன்ற உடலை உருவாக்கிக் கொள்ள, உங்கள் பருவமே ஏற்றது. நீங்கள் உடற்பயிற்சி அரங்கம் கேட்பதைப் பற்றி நான் மகிழ்கிறேன். விடுதியின் ஆட்சிக்குழுவின்முன் இதை வைக்கிறேன்' என்று இனிமையாகப் பதில் கூறி அனுப்பினார். பல நாள்கள் சென்றன. மாணவத் தலைவர்களுக்கு அழைப்பு வந்தது. மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பேட்டி கண்டார்கள். 'உங்கள் மனுவைப் பற்றிப் பலமுறை சிந்தித்தேன். ஐயமொன்று அடுத்தடுத்து வந்தது. உங்களைக் கேட்டால், தெளிவு பிறக்கும் என்று நினைத்தேன்.எனவே சொல்லியனுப்பினேன். 'உங்கள் வயதில் பல்வேறு அவாக்கள் போட்டி போடுவது இயற்கை. நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் உரம்பெற நினைப்பது புரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/308&oldid=787143" இலிருந்து மீள்விக்கப்பட்டது