பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைவு அலைகள் எனவே, இருசாராரிடமும் கசப்பு உண்டாகவில்லை; கிண்டல் தோன்றவில்லை. சென்றவர்களை, செல்லாதவர்கள் அவமதிக் காததால், சென்றவர்களும் வெற்றி வீரர்களாகக் காட்டிக் கொள்ள வில்லை. முன்பிருந்த நட்பும் நல்லெண்ணமும் தொடர்ந்து நீடித்தன. சென்னையில் ஒருநாள் நடந்த மாணவர் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியவர்களில் ஒருவர் திரு. தாவூத் அலி மிர்சா என்பவர் ஆவார். அவர் எனக்கு மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தரர். அவருடையதம்பி, இபசித் அலி மிர்சா என் வகுப்பு மாணவர். திரு. தாவூத் அலி மிர்சா பல்லாண்டுகளுக்குப் பிறகு, இந்திய இராச்சிய அவைக்கு, தமிழ் நாட்டின் உறுப்பினர்களில் ஒருவராக அனுப்பப் பட்டார். அக்கால கட்டத்தில் நான் பொதுக்கல்வி இயக்குநன். அந்நிலையில் நான் தில்லிக்குச் சென்றபோது, என்னைத் தம் இல்லத்திற்கு அழைத்து, நல்ல மரக்கறி விருந்து கொடுத்து அனுப்பினார். அவருடைய நட்பு தொடர்கிறது. சாதியும் அரசியலும் இல்லாத மாணவர் பேரவை சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவை உண்டு. ஆண்டு தோறும் அதற்குத் தேர்தல்கள் நடக்கும்; போட்டிகளுக்கும் குறைவில்லை. போட்டியிடுவோர் யார்? பெரிய வீட்டுப் பிள்ளைகள்; மிடுக்கான உடை எடுப்பான பேச்சு கொண்டவர்கள். அக்காலத்திலும் தேர்தல் சுவரொட்டிகளுக்குக் குறைவில்லை. ஆனால், அரசியல் கட்சிகளின் அடிப்படையில் எவரும் போட்டியிடவில்லை. போட்டியிட்டோருக்கு அரசியல் கருத்துகள் இல்லையா? உண்டு. தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்ட திரு. ஏ.வி. பாத்ரோவை 'நீதிக்கட்சிக்காரர்' என்றே மதித்தனர். ஏன்? அவருடைய தந்தை நீதிக்கட்சி ஆட்சியில் கல்வி அமைச்சராக விளங்கியவர் அல்லவா? தந்தையின் கட்சியை மறுக்கும் தனயனாக ஏ.வி. பாத்ரோ இருக்கவில்லை. இந்த பாத்ரோவே, இந்தியக் காவல் துறையில் சேர்ந்து, பிற்காலத்தில் சென்னை மாநகரில் காவல் ஆணையராகச் சிறப்புடன் விளங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/312&oldid=787148" இலிருந்து மீள்விக்கப்பட்டது