பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. 岑1· சுந்தரவ டிவேலு 271 ஏ. வி. பாத்ரோ எனக்கு மூத்தவர். இவருடைய உறவினர் திரு. சாம்பமூர்த்தி என்பவர் என்னுடன் படித்தார். அவரும் ஒருமுறை பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'மன்றப் பொறுப்புகளைத் திறம்பட நடத்துவாரா என்பதைக் கருதியே வாக்களிப்போம். மாணவர் இல்லாவிட்டால், அன்றையச் சூழ்நிலையில், பாத்ரோவோ, சாம்பமூர்த்தியோ, சக்கரவர்த்தியோ பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. கல்லூரித் தேர்வுகளில் அரசியல் கட்சிகளின் பேரால் ஆதரவு திரட்டாததுபோலவே, சாதி சமயங்களின் பேரால் ஆதரவு திரட்டுவதும் இல்லை. ஒருமைப்பாட்டைப் பற்றி ஓயாது ஒப்பாரி வைக்கும் இந்தக் காலத்தில், திறமையைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதில் சாதியைக் காட்டி, ஆதரவு திரட்டுவது மூச்சாகிவிட்டது. இதற்கு யார் பொறுப்பு? இளைஞர் உலகமா? இல்லை. மூத்தோர் உலகம். தனித்தனியாகப் பிரிந்து வாழும் சாதிப்பெரியவர்கள் கோணலாக நடந்தால் கோபம் வராது. ஏன்? அவர்கள் நடத்தையில் புரட்டு இல்லை. அனைத்துலக ஒற்றுமை', 'எல்லோரும் ஒர்குலம்; ஒர் இனம்' என்று முழங்கி, எழுதி, சூதுவாதறியாத அப்பாவி மக்களை மயக்கிவிட்டு, திரைமறைவில் சாதித் தீயை வளர்ப்போர், இந்தியப் பொது வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள மூத்தோர். இந்தியா, தன்னாட்சி பெற்றபின், பெரிய இடங்களில் சாதிப் பாசம் ஒன்றே மூச்சாக உள்ளது. அது கிடக்கட்டும். பழங்கணக்கைப் பார்த்துப் பசியாறுவோம். வாருங்கள். பேச்சுக் கலையை வளர்த்த பேரவை வகுப்பறைகளில் வளர்க்க முடியாத பேச்சுக் கலையை வளர்ப்பதற்குத் துணை நிற்பவை மாணவர் பேரவைகள். எனவே, சிறந்த பேச்சாளர்களை அழைத்துப் பேச வைப்பார்கள். 'நான் உள்ளவரை இவரைக் கூப்பிடமாட்டேன்' என்னும் ஆதிக்கப் r: -- - 'ாக்கு அன்று குறைவு. எனவே, திரு. ஆர்க்காடு இராமசாமி முதலியாரை அழைத்துப் பேச ఇ/# மாணவர் தலைவர், திரு. சத்தியமூர்த்தியையும் அழைத்துப் பேச வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/313&oldid=787149" இலிருந்து மீள்விக்கப்பட்டது