பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 நினைவு அலைகள் பத்து மணித்துளிகள் துரங்காது தவித்தேன். தாளிட்டிருந்த அறையின் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. மின்விளக்கைப் போட்டேன். கதவைத் திறந்தேன். திடுக்கிட்டேன். யாரைக் கண்டேன்? என்னுடைய ஊரைச் சேர்ந்த ஒரு வரைக் கண்டேன். அவர் என்னைப் பார்க்க, முன்னர் வந்ததில்லை; அப்போதுதான் முதன்முறையாக வந்திருக்கிறார். ஏதோ அசாதாரணமான நிகழ்ச்சி நடந்திருக்குமென்று அஞ்சினேன். 'வாங்க சித்தப்பா. ஊரில் தாத்தா எப்படியிருக்கிறார்?' என்று பதற்றத்தோடு கேட்டேன். சித்தப்பா முறையாகிய மாணிக்கம், நாற்காலியில் உட்கார்ந்தபடியே, நான் ஊருக்குப்போய் நாளாயிற்று. மளிகைக்கடைச் சாமான் வாங்க கொத்த வால் சாவடிக்கு வந்தேன். 'போகிறது போகிறாய், வடிவேலுவைப் பார்த்துவிட்டு வா' என்று அண்ணன் சொன்னார். அதனால் திடீரென வந்தேன். - 'நேரமாகிவிட்டதால் ஒட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்து விட்டேன். காலையில் -Են)յ மணி வண்டிக்குப் போகப்போகிறேன். அதுவரை இங்கே படுத்திருக்கலாமா? என்ற கேள்வியோடு தம் பதிலை முடித்தார். என் கட்டிலிருந்து சமக்காளத்தை வாங்கித் தரையில் விரித்தார். ஒரு தலையணையைப் பெற்றுக்கொண்டு படுத்தார். விளக்கை அனைத்துவிட்டு நானும் படுத்தேன். 'ஊருக்கு வா வடிவேலு ஊருக்கு வந்து நாளாகிறதாமே! காலையில் என்னோடு வா. அடுத்த நாள் காலையில் திரும்பி வந்து விடலாம். ஒருநாள் விடுமுறை போதும்' என்றார் என் சித்தப்பா. o 'என்னிடம் ஒளிக்காதீர்கள் சித்தப்பா. தாத்தா இறந்து போய் விட்டார். அதைச் சட்டென்று சொன்னால் அதிர்ச்சியடைவேனென்று எண்ணி, மெல்ல மெல்ல வெளியிடுகிறீர்கள். அப்படித்தானே' என்று மடக்கினேன். 'எனக்குத் தெரிய அப்படியொன்றும் இல்லை. அவருக்கு எண்பத்திரண்டு வயது ஆகிவிட்டது. உன்னைப் பார்க்க விரும்புவதாக, வருவோர் போவோர் எல்லோரும் சொல்லுவார்கள். அதனால் நானாகவே உன்னை ஊருக்கு அழைக்கிறேன்' என்றார். 'இல்லை இல்லை. பத்து நிமிடங்களுக்குமுன் தாத்தாவின் சவம் என் கண்முன் தோன்றிற்று. அவர் இறந்திருக்க வேண்டும். நீங்கள் மறைத்துப் பேசுகிறீர்கள்' என்றேன். 'சவம் கனவில் தோன்றுவது நல்ல அறிகுறி. தாத்தா பல்லாண்டு வாழ்வாரென்று பொருள்' என்று விளக்கஞ் சொன்னார். உறங்கிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/316&oldid=787152" இலிருந்து மீள்விக்கப்பட்டது