பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 275 == எல்லாரும் சமம் என்று எண்ணிய தாத்தா விடியற்காலை எழுந்தோம். சித்தப்பாவோடு எழும்பூர் சென்றேன். வாலாஜாபாத்திற்கு இரயில் ஏறினோம். பாலூர் புகை வண்டி நிலையத்தைத் தாண்டியபோது, சித்தப்பா மெல்லச் செய்தியை அவிழ்த்தார். "தாத்தாவின் உடல்நிலை நன்றாக இல்லை. வயது ஆகிவிட்டதே! எப்படியிருக்குமோ என்று நினைத்து உன்னை அழைத்துவர என்னை அனுப்பினார்கள்' என்றார். பல்லைக் கடித்துக்கொண்டு அவருடன் பயணம் செய்தேன். வாலாஜாபாத்தில் இறங்கினோம். வழி நெடுகச் சேறும் தண்ணிரும். எனவே, வாடகைக்கு வரும் ஒற்றை மாட்டு வண்டிக்காரர்களும் எங்கள் ஊருக்கு வர மறுத்து விட்டார்கள். சித்தப்பாவும் நானும் நான்கு கல் தொலைவு நடந்தே சென்றோம். இளையனார் வேலூரைத் தாண்டிச் செய்யாற்றில் இறங்கும்போது, "தாத்தா இறந்துவிட்டார்போல் தோன்றுகிறது' என்றார். முதல் நாள் விழிப்புக் கனவில் அதைக் கண்டது என் நினைவுக்கு வந்தது. நான் எதிர்பார்த்தது நடந்து விட்டது என்பதை உணர்ந்தேன். ஊருக்குள் நுழைந்தேன். மூச்சுப் பேச்சில்லாத தாத்தாவைக் கண்டேன். கண்ணிர் மழை பெய்தது. என்னைச் செல்லமாக வளர்த்தவர்; மாலை நேரங்களில் கட்டாயப்படுத்தி வெந்நீரில் குளிக்க வைத்தவர். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, கைநிறைய வீட்டு நெய்யைப் பெய்து உண்ணும்படி வற்புறுத்தியவர். திங்கள்தோறும் காஞ்சிபுரத்திற்கு வந்து, என்னை அழைத்துக்கொண்டு கோயில்களுக்குச் சென்றவர். கோயில் பிரசாதங்களை வாங்கி உண்ணச் செய்தவர். காசு பணம் அடிக்கடி கொடுத்தவர். இப்படிப்பட்ட அருமைத் தாத்தாவிடம் "பாருக்குத்தான் பற்று இராது? என் தாத்தா பெரியவர். எதில் வயதில்; குணத்தில்: வாழ்க்கை முறையில். எண்பத்திரண்டாம் வயதில் இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு அஆாத்திற்கு நடந்து சென்றார். இரயில் ஏறிக் காஞ்சிக்குச் ”றார். கோயில்களில் கும்பிட்டார். மாலையில் திரும்பி வந்தார். இல் i. H. E. to H. i. (i. o H. ■ தி 937 நாளில் அந்த வயதில் எட்டுக்கல் நடந்தார். இருப்பினும் "பித்துப் படுக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/317&oldid=787153" இலிருந்து மீள்விக்கப்பட்டது