பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 283 - முதல் சுயமரியாதை மாநாடு என்பாட்டனாரின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, செங்கற்பட்டில் நடந்த மாகாண சுயமரியாதை மாநாடாகும். அதுவே முதல் சுயமரியாதை மாநாடு. அது 1929 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள், பதினேழு பதினெட்டு ஆகிய இரு நாள்களும் நடந்தது. அந்த மாநாட்டுக்கு முன்பே, நான் என் மன உணர்வில் தீவிர சுயமரியாதைக்காரன் ஆகிவிட்டேன். எனவே அம் மாநாட்டிற்குச் சென்றேன். பிரதிநிதியாகவே சென்றேன். இரு நாள்களும் இருந்தேன். அக்கறையோடு கலந்து கொண்டேன். முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்தியவர்களைப் பற்றிச் சில சொற்கள். அதன் வரவேற்புக் குழுத் தலைவர், மன்னுார் கிருஷ்ணசாமி ரெட்டியார்; 'எம். கே. ரெட்டி' என்று சுருக்கமாக அவரை அழைப்பார்கள். அவர் ஒரு பட்டதாரி, செங்கற்பட்டு மாவட்டக்கழகத்தின் தலைவர்: மிகத் திறமையான தலைவர். i. அக்காலத்தில், தமிழகத்தின், செங்கற்பட்டு, கோவை, சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கழகங்கள் நிர்வாகத் திறமைக்குப் புகழ் பெற்று விளங்கின. செங்கற்பட்டு நகரில் மாநாட்டிற்குப் பொறுப்பேற்றவர் யார்? மேலமையூர் அப்பாசாமி முதலியார். அவர் புகழ்பெற்ற அரிசி வணிகர். அவருடைய அண்ணன் மகன் மே. வேதாசலம். இவர் அப்பாசாமி முதலியாருக்கு வலக்கரமாக இருந்து பம்பரம்போல் செயல்பட்டார். திரு. வேதாசலம், பிற்காலத்தில் செங்கற்பட்டு நகராட்சிக்குத் சிலைவரானார்; தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் "சாட்சித் தலைவராக இருந்து நற்பணியாற்றினார். அக்கால நகராட்சித் தலைவர்களுக்கு வண்டிப் படி உண்டு; அது ஒன்றும் ,ெ பருந்தொகையல்ல; திங்களுக்கு எழுபத்தைந்து ரூபாய்கள். ೧." திரு. வேதாசலம், அத்தொகையைத் தனிக்கணக்கிற் -டு சேர்த்து வைக்கச் செய்தார். ெ இதயத்தைந்து ஆண்டுகளில் தொடர் வட்டியோடு அச்சேமிப்பு 'ருந்தொகை ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/325&oldid=787162" இலிருந்து மீள்விக்கப்பட்டது