பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 284 நினைவு அலைகள் அச்சேமிப்பு, இன்றைய செங்கற்பட்டு நகராட்சி அலுவலகக் கட்டிடத்தைக் கட்ட உதவிற்று. மாநாட்டின் தலைவர் யார்? பட்டிவீரன்பட்டி திரு டபிள்யூ பி.ஏ. செளந்தரபாண்டியன். இவர் செல்வர்; செருக்கில்லாத செல்வர்; தோட்ட முதலாளி: தொழிலாளிகளை அரவணைத்துக் கொண்டிருந்த முதலாளி. வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்த கொள்கை உறுதியுடைய தீரர். சுயமரியாதை இயக்கம் சமதர்ம இயக்கமாகத் தழைத்தபோதும், கசப்புக் கொள்ளாமல் தன்மான இயக்கத் துண்களில் ஒருவராக விளங்கினார். பொதுத் தொண்டிற்குத் தன்னுடைய உழைப்பை, ஆதரவைக் கொடுத்ததோடு பொருளையும் தாராளமாகக் கொடுத்தவர் செளந்தரபாண்டியன். பண்பாளரான செளந்தரபாண்டியன் பிற்காலத்தில், மதுரை மாவட்டக் கழகத் தலைவராக விளங்கியபோது, நான் அம்மாவட்டத் தின் கல்வி அலுவலராக இருக்கும் வாய்ப்புப் பெற்றேன். அப்போது கட்டாயக் கல்வியை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்களில் நடைமுறைப் படுத்துவதில் அப்பெரியார் எனக்குத் துணை நின்றார். செங்கற்பட்டுச் சுயமரியாதை மாநாட்டில் இந்த இலட்சிய வாதியைத் தொலைவில் இருந்தே கண்டேன். உறுதியான உரையினைக் கேட்டேன். முதல் சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் யார்? டாக்டர் சுப்பராயன். அப்போது, அவர் சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சர். சேலம் மாவட்டத்தில் நிலக்கிழார் பரம்பரையில் தோன்றிய அவர், இங்கிலாந்து சென்று படித்து, பாரிஸ்டர் பட்டம் பெற்றார். காங்கிரசுவாதியாக, பொதுத்தொண்டு ஆற்றினார். அவருடைய அமைச்சரவையே வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது முதல் இருபது ஆண்டுகளுக்குமேல், அம்முறை செயல்பட்டது. வகுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு முறை இல்லையேல், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள், அரச அலுவல் ஏணிகளின் கீழ்ப் படிகளிலேயே தேங்கியிருப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/326&oldid=787163" இலிருந்து மீள்விக்கப்பட்டது