பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 287 ஆனால் அவற்றை வேரடி மண்ணோடு களைந்து எடுத்த பிறகே சங்கற்பட்டில் தொடங்கிய மக்கள் போர் முழக்கங்கள் நிற்கும்' ன்பதைக் காட்டின. #. o அந்த அறப்போர் முழக்கங்கள் வாழையடி வாழையாகத் தொடர்வதை நேருக்கு நேர் கண்டேன். அந்நிகழ்ச்சிகள் என்ன? தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் நூற்றாண்டுபிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் இரு நாள்களும் காலை முதல் நள்ளிரவுவரை நிகழ்ச்சிகளை அடுத்து நிகழ்ச்சி என்று தொடர்ந்தன. அவை வெறும் திருவிழா நிகழ்ச்சிகளா? இல்லவே இல்லை. நம் எதிர்கால வரலாற்றை உருவாக்கும் அடிப்படை. தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் நூற்றாண்டுவிழா தனிச்சிறப்பு உடையதாகும். அரசே இத்தகைய விழாவெடுத்தல் அருமை. ஒராண்டு முழுவதும் விழா வெடுத்தல் அதனினும் அருமை. மாநிலம் முழுவதும் விழா வெடுப்பது தனிச்சிறப்பாகும். இவ்விழா நல்விழா தொண்டிற்கு நன்றி சொல்லும் நல்விழா, அறுபது ஆண்டு காலம், நலிந்தோருக்கும் தாழ்ந்தோருக்கும் புரிந்த புரட்சித் தொண்டிற்கு எடுக்கும் பெருவிழா. உலகப் பெரியாருக்கு இத்தகைய பெருவிழா எடுத்து முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழர் நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ளார். மாநாடுகள், பெருங்கூட்டங்கள், பிறந்த நாள்கள் ஆகியவற்றை நான் காணாதவன் அல்லன். ஐம்பது ஆண்டுகளாகக் கண்டு வருபவன். இவற்றில் பெரியனவற்றையும் சிறியனவற்றையும் கண்டறியும் வாய்ப்புகளை நிறையப் பெற்றவன். அன்று, செங்கற்பட்டில் பத்தாயிரம் பேர்கள், மாநில முதல் *யமரியாதை மாநாட்டில் உற்சாகத்துடன் கூடியது மிகப்பெரிய கூட்டம். இப்போது, நூற்றாண்டு விழாவில் ஈரோட்டில் கூடியவர்கள் சில அ2ாயிரவர்கள். இத்தனை பெரிய கூட்டம் எதற்குக் கூடினார்கள்? நன்றிகாட்ட இவர்கள் அனைவரும் தன்மான இயக்கத்தவர்களா? இல்லை. அதில் இருந்து கிளைத்த அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்தவர்களா? கி.மு.க ெ ஏராளமாக இருந்தார்கள். முந்திக் கிளைத்த LI வினரும் இருந்தார்கள். இவர்கள் ஒட்டுமொத்தத்தைவிடப் "துமக்கள் தொகையே மிகப்பெரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/329&oldid=787166" இலிருந்து மீள்விக்கப்பட்டது