பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நினைவு அலைகள் எத்தனை திருநீற்றுப் பூச்சுக்காரர்கள்? எத்தனை நாமட அணிந்தவர்கள்? எத்தனை சமயப்பற்றாளர்கள்? அத்தனை பக்தர்களுட மனிக்கணக்காக இருந்து சிறப்பிப்பானேன்? இடை இடையே, பேச்சாளர்களும் கவிஞர்களும் பெரியா பாணியில் அதிர்ச்சி மருத்துவம் செய்ததற்கும் முகஞ்சுளிக்காமல் அமர்ந்திருந்ததேன்? நன்றிப்பெருக்கே அவர்களைக் குழுமச் செய்தது. அதுவே அவர்களை நெடுநேரம் கேட்கச் செய்தது. 'சாதிகள் தொலைய வேண்டும்; ஒற்றுமை பெருக வேண்டும் என்பதைக் கேட்டு அவர்கள் மிரளவில்லை. பெரியாரின் பெருங்குரல் வழியாகக் கேட்டுக்கேட்டு, அதை ஏற்கட் பக்குவப்பட்டு விட்டார்கள். நெடுநேரம் உட்கார்ந்திருந்த கால்கள் மரத்துப் போகும் அவ்வளவே. அதற்கு மேல் நலிவு இல்லை. ஆனாலும் அடி எடுத்து வைக்கத் தயங்கும். அதேபோல் எண்ணற்றவர்கள் சாதிப்பிரிவு தேவையில்லை என்பதைக் கேட்டு அதிர்ச்சி யடைவதில்லை. ஆனால் தாங்கள் முன்வந்து, அதைத் தட்டிவிட முடியாத நிலையிலுள்ளார்கள். அவர்கள் சாதிப் பிரிவுகளைத் தாக்குவதைப் பற்றிக் கோபப்படவில்லை. அவற்றிற்கு வேர்களாக உள்ள மரபுகள் நம்பிக்கைகள் - சமய நம்பிக்கை உட்பட முதலியவற்றைத் தாக்கும் ஒலிகள், அவர்களை உலுக்கவில்லை. தன்மான இயக்கப் போர் முழக்கங்கள் தன்னலக் கூச்சல்கள் அல்ல; பிரிவு நலக் கூக்குரல்கள் அல்ல; ஆதிக்கத்தைக் காத்துக்கொள்ள எழுப்பும் அலறல்கள் அல்ல: மக்கள் சமுதாயம் முழுவதையும் ஒன்றாக, நன்றாக வாழவைக்கும் உயிர் ஒலிகள், சமத்துவ ஒலிகள்: சமதர்ம ஒலிகள் ஆகும். முதல் சுயமரியாதை மாநாட்டுப் பிரதிநிதியான நான் தமிழக அரசு நடத்திய பெரியார் நூற்றாண்டு விழாவிலும் பங்குகொள்ள வாய்த்ததிை எண்ணி மகிழ்கிறேன். செங்கற்பட்டு மாநாட்டின் முடிவுகள் இப்போது வரலாற்றைப் படைத்த செங்கற்பட்டு மாநாட்டிற்குச் செல்வோம். அதன் முடிவுகளைக் கேட்போம். "மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கைதை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/330&oldid=787168" இலிருந்து மீள்விக்கப்பட்டது