பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 291 திருமணத்திற்கு ஒப்பந்தம் என்னும் சொல்லை அப்போதே பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள். திருமணத்தை எங்கோயாரோ முடிவு செய்து அனுப்பி இருப்பதாகப் பகுத்தறிவு வாதிகள் ஒப்புக் கொள்வதில்லை. அது வாழ்க்கைத்துணை உடன்படிக்கை' என்பதே அவர்கள் முடிவு. 'கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களும் பெண்களும் ஜாதிமத பேதமின்றித் தங்கள் மனைவி புருடர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் பூர்ண உரிமையளிக்கப்பட வேண்டுமென்றும், அதற்கேற்றவாறு, கல்யாணச் சடங்குகள் திருத்தப்பட வேண்டும் என்றும், கல்யாணம் முதலிய சடங்குகள் சொற்பப்பணச் செலவில் நடத்தப்பட வேண்டுமென்றும் எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நாளைக்கு மேலாவது ஒரு விருந்துக்கு மேலாவது நடத்தக் கூடாதென்றும் தீர்மானிக்கிறது. இம்முடிவு செயல்பட்டது; தொடக்ககாலத் தன்மான இயக்கத்தின் சார்பில், பலப்பல கலப்புத் திருமணங்கள் நடந்தன. இரண்டொரு விதவைத் திருமணங்களும் நிகழ்ந்தன. காரைக்குடி மரகதவல்லி - முருகப்பா, மஞ்சுளாபாய் சண்முகம், சிவகாமி - சிதம்பரனார், நீலாவதி - இராமசுப்பிரமணியம், சுந்தரி - அழகப்பா, குஞ்சிதம் - குருசாமி ஆகியோர் கலப்பு மனம் செய்து கொண்டவர்களில் சிலராவர். குற்றாலச் சாரல், குற்றாலத்துக்கு அப்பாலும் தாக்குவதுபோல் கலப்புத் திருமணங்கள் சில தன்மான இயக்கத்திற்கு அப்பாலும் நடந்தன. தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் அத்தகைய திருமணம் செய்துகொண்ட முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். எல்லாச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று இன்று முழங்கும் திராவிடக் கழகத்தின் தாயகமாகியதன்மான இயக்கம், அன்று, கடவுள் நம்பிக்கை பற்றி என்ன கருத்தைச் சொல்லிற்று? இதோ செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டு முடிவுகளில் ஒன்று. 'கடவுள் என்பதின் பேரால் கோவில்களிலாவது அல்லது வேறு இடங்களிலாவது ஒரு பைசாவாவது, ஒரு பைசா பெறும் படியான சாமானாவது செலவழிக்கக்கூடாதென்றும், 'வணங்குகிறவனுக்கும் வணங்கப்படுபவனுக்கும் மத்தியில் காகனாவது வடபாஷையாவது இருக்கக்கூடாதென்றும் இம்மாநாடு *ருதுகிறது. மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/333&oldid=787171" இலிருந்து மீள்விக்கப்பட்டது