பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நினைவு அலைகள் 'இனிமேல், புதிதாய்க் கோயில்கள் கட்டக்கூடாதென்றும் இப்போதிருக்கிற கோவில், மடம், சத்திரம், வேதபாடசாலை முதலியவைக்காக விட்டிருக்கும் சொத்துகளைக் கைத்தொழில், வியாபாரம், ஆராய்ச்சி முதலிய கல்விகளுக்காகவும் கைத்தொழிலுக் காகவும் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டுமாய்ப் பொது ஜனங்களை இம்மாநாடு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. 'கோவில்களில் உற்சவங்கள் முதலியவை கொண்டாடுவதை நிறுத்திக் கொண்டு அவற்றிற்குப் பதிலாக, பொதுஜன அறிவு வளர்ச்சி, ஆரோக்கிய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி முதலியன சம்பந்தமான பொருட்காட்சிகளை நடத்தி மக்களுக்கு அறிவும் செல்வமும் ஏற்படச் செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அக்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருந்ததைக் காண்கிறோம். பிற்காலத்தில், தமிழ் துய்மை பெறுவதற்கு, தன்மான இயக்க எழுத்தாளர்களும் துணை நின்றிருக்கிறார்கள். தாய்த்தமிழில் வழிபாடு என்பதை, இயக்க ரீதியாக முன்வைத்துப் போராடியது, தந்தை பெரியாரின் தன்மான இயக்கமே. அதுவும் இன்றைக்கு ஐம்பத்துஐந்து ஆண்டுகளுக்கு முன்பே. இன்று, அர்ச்சகர் உரிமை எல்லாச்சாதியினருக்கும் வேண்டுமென்று திராவிடக் கழகம் போராடுகிறது. முன்னர்த் தொடக்கத்தில், தரகர் அற்ற வழிபாட்டையே முன்னிறுத்தியது. காசிக்குச் சென்று வழிபடுவோர், விசுவநாதருக்குப் புனலும் பூவும் இட்டு நேரே வழிபடலாம். எப்படியோ தமிழகத்தில், வழிபாட்டிலும் தரகர்கள் புக விட்டுவிட்டார்கள், நம்முன்னோர்கள். தரகர் வழி நெருங்கும்போக்கு, தனிவாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துவிட்டது; நீக்கமற நிறைந்து விட்டது. ஊழல் நோயாகப் பரவிவிட்டது. பூசாரி வழிபாடு, நெடுநாளைக்குத் தொடரும் என்பதால், அப்பூசாரித் தொழிலிலும் எல்லோருக்கும் உரிய பங்கு தேவை என்று தந்தை பெரியார் குரல் எழுப்பினார். அதற்காகக் கிளர்ச்சி செய்ய நாள் குறிப்பிட்டார். எல்லாருக்கும் கல்வி கண்ணுடையார் என்பவர் எவர்? கற்றோரே. மற்றோர்? முகத்திரண்டு புண் உடையோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/334&oldid=787172" இலிருந்து மீள்விக்கப்பட்டது