பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 293 கல்வி, கல்லாமை ஆகிய இரு அதிகாரங்களின் வழியாகக் கல்வியின் தேவையை, பெருமையை அழுத்தி வலியுறுத்தினார் திருவள்ளுவர். கற்பாறை மேல் பெய்த மழை நீராக ஒடிவிட்டது, அக்குறட்பாக்கள். தமிழர்களில் நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு மேல், எழுத்தறிவு பெறாதவர்களாகவே இருந்தார்கள். பெண்கள் நிலை மேலும் மோசம். இந்நிலையில், செங்கற்பட்டுச் சுயமரியாதை மாநாடு கல்வி பற்றி நான்கு முடிவுகளை மேற்கொண்டது. அவற்றிலே ஒன்று, ஆழமான சமூகநீதி உணர்விலிருந்து முளைத்ததாகும். 'மற்ற வகுப்புப் பிள்ளைகளுக்குச் சமமாகக் கல்வி அடைகிற வரையிலும் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுகிற வகுப்பினரின் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்களில் புத்தகம், உண்டி, உடை முதலியவற்றை இலவசமாக அளிக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.' ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கொடுமைக்கு ஆளான அப்பிரிவினருக்கு நீதி கோரி முடிவெடுத்த மக்கள் இயக்கம், தந்தை பெரியாரின் தன்மான இயக்கமே ஆகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகுப் அதே சமூக நீதி உணர்வுடைய ஏழைபங்காளர் காமராசர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார். தமிழ்நாட்டுக் கல்வியின் பொற்காலத்தைத் தொடங்கிவைத்தார். எல்லா ஏழைகளுக்கும் இலவச உணவு, உடை, பாடநூல்கள் கிடைக்க வழிவகை செய்தார். அந்த அமைதிப் புரட்சியின் முன்னோடும் பிள்ளையாக இருக்கும் பேற்றினை நான் பெற்றேன். நம் சமுதாய அநீதியின் அடையாளமாக இருக்கும் தாழ்த்தப்பட்ட வர்கள், சென்ற ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ முன்னேறியுள்ளார்கள். ஆராட்சி மன்றம் முதல் உயர்நீதி மன்றம் வரை இடம் பிடித்துள்ளார்கள். எல்லா நிலைக் கல்வியிலும் இடம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய தாகும். து 14. வளர்ந்தவர்கள், வளரவேண்டியவர்களுக்கு ஆலோசகர் 6rтгтд, G ஆதரவாளர்களாக, வழிகாட்டிகளாக, நண்பர்களாகச் செயல்பட வண்டாமா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/335&oldid=787173" இலிருந்து மீள்விக்கப்பட்டது