பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 நினைவு அலைகள் தங்கள் பிரிவைச் சார்ந்த மாணவ மாணவிகளின்பால் அக்கறை காட்டி, தொடர்பு கொண்டு, கருமமே கண்ணாயிருக்க கல்வியிலேயே கருத்தாயிருக்க நெறிப்படுத்த வேண்டாமா? நெறிப்படுத்தும் பெரியோர் இல்லாமையால், சமுதாய ஏணியின் கீழ்ப்படிக்கட்டுகளில் உள்ள மாணவர் எடுப்பார் கைப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். அரசியல் மிராசுதார்களின் அடியாட்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். துன்பப்பட்டு வருகிறார்கள். படிப்பைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். இப்படிப் பாழாகலாமா? 'கல்லைக் குத்துவானேன்; கையை நோவானேன்' என்னும் பொறுப்பற்ற போக்கு, வளரும் பிரிவுகளின் முன்னோடிகளுக்கு ஆகாது. சமுதாய முன்னேற்றத்திற்கு அவர்கள் பெரிய தியாகம் செய்யத் தேவையில்லை. ஒரளவு நேரத்தை ஒதுக்கி, இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவது அவா.கள தலையாய கடமையாகும. 'பள்ளிக்குப் போகத்தக்க சிறுவர் சிறுமியர்களுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி மாத்திரம் பொதுநிதியில் இருந்து போதிக்கப்பட வேண்டும்' என்பது மாநாட்டின் மற்றோர் முடிவு. இன்றைய நிலையில், இது குறுகிய கண்ணோட்டமே. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இது புரட்சிகரமான முடிவு. பள்ளிக்கூடங்களே இல்லாத பல்லாயிரம் ஊர்களும், மழைக்குக் கூடப் பள்ளியில் ஒதுங்காத பல இலட்சம் மக்களும் இருந்த கால கட்டத்தில் இது முற்போக்கு முடிவு. கல்விக்கூடங்களில் பாடங்களை எம்மொழிகளில் கற்பிக்க? 'கல்வி ஸ்தாபனங்களிலே தாய்பாஷையும் பொதுப்பாஷையாக அரசாங்க பாஷையும் தவிர மற்ற பாஷை படிப்புக்காகப் பொதுப் பணத்தை உபயோகிக்கக்கூடாது' என்று செங்கற்பட்டு மாநாடு முடிவு செய்தது. 'உயர்தரக் கல்விக்குப் பொதுநிதிகளைச் செலவழிக்கக்கூடா தென்றும், அப்படிச் செலவழிக்கப்படவேண்டிய அவசியம் இருந்தால் வகுப்புவாரி விகிதப்படி மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த முதல் சுயமரியாதை மாநாடு முடிவு செய்தது. இந்த முடிவில் இரண்டு பகுதிகள் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/336&oldid=787174" இலிருந்து மீள்விக்கப்பட்டது