பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 295 முதற்பகுதி இன்றைக்கு ஒரளவு பொருந்தாது. இரண்டாம் பகுதி இன்றைக்கும் பொருந்தும். வெவ்வேறு வகுப்புகளைக் கொண்ட சமுதாயத்தில் வகுப்புரிமை எல்லாத் துறைகளிலும் செயல்படுவதே நீதி. தொழிலாளர் நலனை மறவாத தன்மான இயக்கம் சமுதாய மாற்றத்தில் ஆர்வம்கொண்ட சுயமரியாதை இயக்கமோ அதன் தந்தையாகிய பெரியாரோ, தொழிலாளர் நலனை மறந்ததில்லை. 1927-28 ஆம் ஆண்டுகளில் நடந்த தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் போர்ாட்டங்களில் தலைவர் பெரியார் அவர்கள் நேரடியாகப் பங்கு கொண்டார்; சிறைப்பட்டார். தொழிலாளர் இயக்கத்திற்கு ஆதரவான முடிவுகளைச் சுயமரியாதை மாநாடு நிறைவேற்றியதில் வியப்பில்லை. அந்தக் காலத்தில் தென்னிந்திய இரயில்வே நாட்டுடைமை ஆகவில்லை. ஆங்கிலேய முதலாளிகளின் நிறுவனமாகத் தனித்து இயங்கிற்று. அன்று நம்மை ஆண்டவர்களும் ஆங்கிலேயர். ஆகவே, அவர்கள், நடுநிலைமை வகிப்பதற்குப் பதில், ஆங்கிலேயக் கம்பெனிக்குத் துணை நின்றார்கள். * = 'தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் அரசாங்கத்தார் நடுநிலைமை வகிக்காததற்காக அவர்களைக் கண்டிப் பதுடன் அநியாயமாகத் துன்பப்பட நேர்ந்த தொழிலாளர்களிடம் இம்மாநாடு அனுதாபம் காட்டுகிறது என்று முடிவு செய்தது. அன்னிய ஆட்சியைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை என்பதை மாநாடு காட்டிக்கொண்டது. ஊதியக் கொள்கைக்கு வழிகாட்டும் மற்றோர் முடிவையும் காண்போம். நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழிலாளர்களுடைய முன்னேற்றம் அவசியமானபடியால் அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும் அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு, 'ஒவ்வொரு தொழிலிலும் கிடைக்கும் லாபத்தில் அந்தந்தத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 'சமூக முன்னேற்றத்திற்கும் சமூக விடுதலைக்கும் சுயமரியாதை இயக்கக் கர்த்தாவாகிய பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றியுள்ள பெரும்பணிக்கு நன்றி பாராட்டுவதுடன் அவர்கள் இவ்வியக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/337&oldid=787175" இலிருந்து மீள்விக்கப்பட்டது