பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 நினைவு அலைகள் - = தலைமை வகித்து நடத்துவதில் அவர்கள்பால் மக்களுக்குப் பூரண நம்பிக்கை உண்டென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது' என்ற முடிவோடு மாநாடு இனிது கலைந்தது. அம்மாநாட்டில் இருநாள்களும் முழுநேரமும் உற்சாகத்துடன் கலந்துகொண்டேன். கருத்துகளைக் கேட்டேன்; உணர்வுகளைப் பெற்றேன். அன்று, தந்தை பெரியார்பால் நான் கொண்ட நம்பிக்கை இன்றும் இம்மியளவும் மாறவில்லை. 37. பொதுவாழ்க்கை எம்.எல்.சி ஆகியும் பூட்சு தைத்தார் ஒரு விடுமுறை நாள். விக்டோரியாமானவர் விடுதித் தாழ்வாரத்தில் நின்றுகொண்டிருந்தேன். இடுப்பில் தார்பாய்ச்சிய கிளாஸ்கோ மல் வேட்டி. உடம்பில் மூடு 'கோட்டு. தலையில் தும்பைப்பூ வெள்ளைத் தலைப்பாகை. இந்தக் கோலத்தில் இருந்த முதியவர் ஒருவர் என்னை நெருங்கினார். 'தங்களிடம் சில மணித்துளி பேசலாமா?' என்று ஆங்கிலத்தில் கேட்டார். 'சரி ' என்றேன். 'தங்கள் அறைக்குப் போகலாமா? தனியாகப் பேச விரும்புகிறேன்' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அறைக்குள் நுழைந்தேன். முதியவர் பின் தொடர்ந்தார். உட்காரச் சொன்னேன். மறுத்துக்கொண்டே, தன் கையில் இருந்த வெள்ளைத் துணிப்பையை அவிழ்த்தார். ஒன்றன்பின் ஒன்றாக, நான்கு அட்டைப் பெட்டிகளை எடுத்து வெளியே வைத்தார். எனக்கு ஏதும் விளங்கவில்லை. தன் சட்டைப் பைக்குள் இருந்து அட்டைத்துண்டு ஒன்றை எடுத்தார். பணிவோடு என்னிடம் கொடுத்தார். நொடியில் படித்தேன். யார் இவர்? குருசாமி, எம்.எல்.சி, பல்லாவரம் என்பது விளங்கிற்று. 'சட்டமன்ற உறுப்பினரா? உட்காருங்கள்' என்றேன். அப்போதும் அவர் உட்கார இசையவில்லை. 'நான் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினன். நான், அருந்ததிய சாதியைச் சேர்ந்தவன். அச்சாதி, பழங்குடி மக்களின் சாதிகளில் ஒன்று. அச்சாதியின் பிரதிநிதியாக நான் சட்டமன்றத்தில் இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/338&oldid=787176" இலிருந்து மீள்விக்கப்பட்டது