பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 299 அன்று மாநில, மைய அரசுகளில் பல நிலைகளில் பணிபுரிவோரின் மொத்த எண்ணிக்கையைச் சொன்னார். மலைப்பான எண்ணிக்கை: எத்தனையோ இலட்சம். அத்தனை பேரும் ஆங்கில ஆட்சிக்கு 'விசுவாசிகள் என்றார். அன்னிய ஆட்சியை எதிர்க்கும் காந்தியடிகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கையைக் குறிப்பிட்டார். பிந்தியதிலும் முந்தியது பலமடங்கு அதிகம் என்று காட்டினார். காந்தியத் தொண்டர்கள் அத்தனை பேரும் போரில் குதிக்க மாட்டார்கள். அவர்களோ சிலர். நாமோ, ஆங்கிலேயரை ஆதரிக்கிற நாமோ, பலர். ஆகவே வெள்ளையன் வெளியேறுகிற ஆபத்து இல்லை என்று விளக்கினார் நண்பர் இராமமூர்த்தி. ஆயினும் நான் மெள்ள மெள்ள, விடுதலை இயக்கத்தின்பால் சாய்ந்தேன். வாங்கும் புதிய உடைகள் கதர் உடைகளாயின. ஆனால் பழைய வெளிநாட்டு ஆலைத்துணிகளைக் கொளுத்தவில்லை. முழுக்க முழுக்கக் கதர் உடையில் இல்லாமையால், ஆங்கில அரசாங்க ஒற்றர் எவருடைய தனிக் கண்ணோட்டமும் என் மேல் விழவில்லை. என் படிப்பும் இடையறாது தொடர்ந்தது. தண்டி யாத்திரைக்கு ஓ.வி. அளகேசன் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கும் நாள் நெருங்கிற்று. என் நண்பர்கள் சிலரிடையே பதைபதைப்பு:குசுகுசு வென்ற பேச்சுகள் எந்த இரகசியத்தையும் துருவுகிற பழக்கம் எனக்குக் கிடையாது. இந்த வயதிலும் வரவில்லை. எனவே, அப்பேச்சுகளைப் பற்றி உளவு பார்க்கவில்லை. i. ஒரு நாள் மாலை மயங்கும் வேளை. அன்பர் ஒ.வி. அளகேசன் என் அறைக்கு வந்தார். 'நான் போய் வருகிறேன். ஆண்டவன் புண்ணியத்தில் நன்றாகத் திரும்பி வந்தால் பார்ப்போம். 'என் பெட்டியையும் படுக்கையையும் கொண்டுபோய்த் தெரிந்தவர் 飄 விட்டில் ஒப்படைக்கணும். அப்புறம் இரயில் பிடித்துப் 'ாகனும் போய் வரட்டுமா என்று சொல்லிக் கொண்டே என் கைகளைப் பாசத்துடன் பிடித்துக் குலுக்கினார். எளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 5à:: நெருங்குகின்றன: இன்னும் இல நாள்களில் வந்து * நலயா நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டு வருகிறாய். சிேதல்வகுப்பின், நிறைய மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெறுவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/341&oldid=787180" இலிருந்து மீள்விக்கப்பட்டது