பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3OO நினைவு அலைகள் அப்படியிருக்க, இப்போது எங்கே போகிறாய்? தேர்வுகளைப் பற்றி உனக்கு அச்சம் ஏதும் இருக்கக் காரணமில்லையே' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மற்றொரு நண்பர் அங்கு வந்து சேர்ந்தார். 'ரிக்ஷா வண்டிக்காரன்அவசரப்படுகிறான். உனக்கும் நேரமாகிறது. வழியில் வேறொரு வீட்டிற்கும் செல்ல வேண்டியிருக்கிறது. தாமதம் செய்யாதே; புறப்படு; வெற்றியோடு திரும்பி வா' என்று சொல்லியபடியே அன்பர் ஒ.வி. அளகேசனை அழைத்துக் கொண்டு போனார். அவர்களோடு நானும் சென்றேன். ரிக்ஷா ஏறிப் போகும்வரையில் நின்று கொண்டிருந்தேன். அளகேசன் புறப்பட்டுச் சென்றதும், நான் என் அறைக்குச் செல்லவில்லை. மற்ற நெருக்கமான காந்திய நண்பர்களை நாடிச் சென்றேன். என்னுடைய திகைப்பையும் குழப்பத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். 'அளகேசன் எனக்கும் நண்பராயிற்றே! அவர் ஏன் தேர்வுகள் எழுதாமல் புறப்பட்டுப் போய்விட்டார்? என்னிடம் ஒளிக்கும் இரகசியம் என்ன? " என்று நண்பர்களைக் கேட்டேன். ஒருவரும் சரியான பதில் கூறவில்லை. 'தெரியாது' என்றார் ஒருவர்; 'மற்றவர்களைக் கேட்டுப் பார்ப்போம் என்றார் மற்றொருவர். ஏறத்தாழ, இரண்டு மணிநேரம் என்னை அலைக்கழித்தார்கள். பிறகு, மெல்லச் செய்தியைச் சொன்னார்கள். என்ன செய்தி? காந்தியடிகளின் தலைமையில் அவருடைய தொண்டர்கள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்குச் செல்லப் போகிறார்கள். அங்குப் போய்ச் சேர்ந்தபின், உப்புக் காய்ச்சுவார்கள். தனியார் உப்புக் காய்ச்சக்கூடாதென்பது சட்டம். அச்சட்டத்தை மீறுவதன் வாயிலாக, அன்னிய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கப் போகிறார், காந்தியடிகள். இவை எனக்குத் தெரிந்த செய்திகள். 'இவற்றிற்கும் அளகேசன், மாணவர் விடுதியைவிட்டுப் போவதற்கும் தொடர்பு என்ன?' என்று படபடப்போடு கேட்டேன். 'தண்டி யாத்திரை செல்லும் காந்திய அணியில் அளகேசன் சே! விரும்புகிறார். அவர்கள் சபர்மதியைவிட்டுப் புறப்படுவதற்கு முன் அங்குப் போய்ச் சேரத் துடிக்கிறார். 'இன்றிரவு, பம்பாய் விரைவு வண்டியில் புறப்பட்டால் நேரத்தில் போய்ச் சேர்ந்து விடுவார்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/342&oldid=787181" இலிருந்து மீள்விக்கப்பட்டது