பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Յ01 'இது, முன்கூட்டியே நாலு பேருக்குத் தெரிந்தால், இடைஞ்சல் வரக்கூடும். போலீசுக்காரர்கள், எந்தச் சாக்கிலாவது அளகேசனை நிறுத்தி வைத்துவிடக்கூடும். 'தண்டி யாத்திரையில் போய்ச் சேர்வது என்னும் முடிவில் அளகேசன் உறுதியாக இருக்கிறார். "அப்புறம் காதும் காதும் வைத்தாற்போல், அது பலிக்க ஏற்பாடு செய்வது நண்பர்கள் கடமையல்லவா? அதனால் விடுதியைவிட்டுப் புறப்படும்வரை நாலு பேர்களுக்குத் தெரியாமல் வைத்திருந்தோம்' என்ற தகவல்களைத் தெரிந்துகொண்டேன். உள்ளம் அமைதி அடையவில்லை. 'அளகேசனுக்குப் பதினெட்டு வயதாகிவிட்டது. நல்லது கெட்டதை முடிவுசெய்ய வேண்டியது அவரே. நாம் கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும் தண்டி யாத்திரையில், ஆசிரமத்தில், தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட தொண்டர்கள் மட்டுமே வரலாம் என்று காந்திஜி அறிவித்திருக்கிறாரே! "கடைசி நேரத்தில் போய்ச்சேருகிற சத்தியாக்கிரகப் பயிற்சி பெறாத அளகேசனை எப்படிச் சேர்த்துக்கொள்வாா? 'மாட்டேனென்று' சொல்லிவிட்டால், வீண் அலைச்சல், பணச்செலவு: தேவையில்லாமல் தேர்வுகளை இழத்தல்; இத்தனையும் சேர்ந்து, அளகேசனுக்குள், எரிச்சலையும் ஆற்றாமையையும் வளர்க்காதா!' என்று மடக்கினேன். 'இப்பப் பேசிப் பயன் என்ன? அரக்கோணம் தாண்டிப் போயிருப்பான். என்ன நடக்கிறதென்று பொறுத்து இருந்து பார்ப்போம்" என்று மட்டுமே நண்பர்களால் கூற முடிந்தது. 'அளகேசன் நடவடிக்கை சரியா? நண்பன் என்ற முறையில் நான் மேலும் அதிக விழிப்போடு, நடவடிக்கைகளை வேவு பார்த்திருக்க வேண்டுமா? 'இது முன்னர் தெரிந்திருந்தால்தான் என்னால் தடுத்திருக்க முடியுமா? அவர்கள் வீட்டுக்காவது விவரத்தை எழுதிப்போட்டு இருக்கலாம். 'சரி அவர் செய்தது சரியென்றால், இனி நான் என்ன செய்யவேண்டும், பேசாமல் படித்துக் கொண்டிருப்பதா படிப்பை விட்டுவிட்டால், பெற்றோர்க்கு நம்பிக்கைத் துரோகமல்லவா? சத்தியாக்கிரகம். ”டித்தனம் என்று ஈ.வெ.ரா. சொல்வது தப்பா இப்படியெல்லாம், தேவையில்லாமல் என்னை நானே குழப்பிக் காண்டேன்; அன்று இரவு தூக்கத்தை இழந்து அல்லல்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/343&oldid=787182" இலிருந்து மீள்விக்கப்பட்டது