பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 309 தாயுமானவர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு வைராக்கியம் முதலாக இருப்பது வியப்பல்ல. நாம் முப்பதுக்குத் திரும்புவோம். தீரர் ஆயண்ணன் வேதாரண்யத்தில் நடந்த போராட்டத்திலாவது கலந்து கொள்ளலாம் என்று திரு. அளகேசன் திரும்பி வந்தார். அதுவும் முடியாமற் போய்விட்டது. ஏன்? சென்னைக்குத் திரும்பியதும் அளகேசனுடைய உடல்நலம் கெட்டு விட்டது. பலநாள் வீட்டோடு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் அளகேசனுடைய ஆர்வம் குறையவில்லை. உடல்நலம் பெற்றதும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாய்ப் பங்கு கொண்டார். அப்போது, பல நகரங்களில், பொதுக்கூட்டம் கூடக் கூடாதென்று 144ஆவது பிரிவின் கீழ் தடை செய்திருந்தார்கள். திரு. அளகேசனும் திரு. ஆயண்ணன் என்னும் மற்றொரு நண்பரும் திருச்சிக்குச் சென்றார்கள்: தடையுத்தரவை மீறினார்கள்: கைது செய்யப்பட்டார்கள்: சிறைத்தண்டனை பெற்றார்கள். திரு. ஆயண்ணன் என்னோடும் அளகேசனோடும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அவர் நாட்டுப்பற்றை மூச்சாகக் கொண்ட இளைஞர்களில் ஒருவர். எப்போதும் கதர் அணிபவர். அன்னிய ஆட்சிக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், 1930ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்கள் நடைபெற்ற இண்டர்மீடியட் தேர்வுகளை எழுதாமல் ஊருக்குத் திரும்பிவிட்டார். சில காலம் காத்திருந்து, அளகேசனோடு சேர்ந்து திருச்சியில் போராட்டத்தில் இறங்கினார். அவருடைய நாட்டுத் தொண்டை கைம்மாறு கருதா மாரிக்குத்தான் ஒப்பிடத் தோன்றுகிறது. தியாகி ஆயண்ணன், தியாகத் தழும்பைக் காட்டி எந்தச் சலுகையும் பதவியும் பெற முயலவில்லை. நா -டுக்கு ஆற்ற வேண்டிய அரும் பெருந்தொண்டை ஆற்றிவிட்டுச் ாத்த வேளாண்மைக்குத் திரும்பி விட்டார். இப்போது ஈரோட்டை அடுத்த மொடக்குறிச்சியில் திரு. *'ன்னன் திருப்தியுடன் வாழ்கிறார். செ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/351&oldid=787191" இலிருந்து மீள்விக்கப்பட்டது