பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 317 அக்காலக் கட்டத்தில் என் தந்தை பயிர்த்தொழிலோடு துணைத் தொழில்களும் நடத்தி வந்தார். நானும் என் தம்பிகள் மூவரும் வெளியூர்களில் இருந்து படிக்க வேண்டிய நிலை வந்தது. அத்தனை பேருக்கும் சம்பளம் கட்ட வேண்டும். சாப்பாட்டுச்செலவுக்கும், உடைக்கும் பணம் கண்டுபிடிக்க வேண்டும். பயிர்த்தொழில், அன்றும் இன்றும் சூதாட்டம். ஒராண்டு விளைந்தால் அடுத்த ஆண்டு காய்ச்சலாலோ வெள்ளத்தாலோ பாழாகிவிடும். வறட்டுக் கூச்சல்களை மட்டும் அறிந்தவர்களே நாட்டை ஆட்டிப் படைப்பவர்கள். அவர்களுக்கோ வேளாண்மையில் உள்ள தொல்லைகளின், இழப்புகள் முழுதும் தெரியாது. மேலெழுந்தவாறே நூலறிவு மட்டுமே கொண்ட அவர்கள் ஆட்டிவைக்கிறபடி ஆடுகிறது நாடு. அதனால், மற்றவர்கள் நன்றாகப் பருத்து ஊதியுள்ள தன்னாட்சி இந்தியாவில், பயிர் இடுவோர் மட்டும் தேய்ந்து கொண்டே வருகிறார்கள். இந்நூற்றாண்டின் முப்பதுகளில் பயிர்ப் பொருள்களின் விலைகள் மளமளவென்று சரிந்தன. ஆகவே குடும்பத் தொழிலால், நால்வரையும் கல்லூரிவரை படிக்க வைப்பது மிகவும் கடினம் என்பதை என் தந்தை நன்கு உணர்ந்தார். உள்ளுரோடு சிறு அளவில், அறுவடைக் காலத்தில் தானியங்களை வாங்கி வைத்திருந்து காய்ந்த காலத்தில் விற்பது துணைத்தொழில். இதிலும் பெரும் முதல் போட்டாரென்று கூற முடியாது. ஆண்டுக்கு மூன்று நான்கு ஆயிரக்கணக்கில் மட்டுமே முதலீடு செய்தார்கள். இத்துணைத் தொழிலும் ஆண்டுதோறும் ஆதாயம் கொடுக்கவில்லை. இருப்பினும் பயிர்த்தொழிலைக் காட்டிலும் இதில் அதிகப் பணப்புழக்கம் இருந்தது. அது எங்களுடைய உடனடிச் செலவுகளுக்குக் கை கொடுத்தது. மற் றோர் துணைத்தொழில் எது? காண்டிராக்ட் வேலை. 'ఖితug: சிற்றுர் æಾæ பழுதுபார்த்தல், சிறு கிடைக்க: ட்டல் ஆகியவற்றை காண்டிராக்ட் எடுப்பார். அவற்றில் கும் சிறு ஆதாயங்களும் உதவின. *துவரை யாரிடமும் போய் நிற்காத என் தந்தையார், எப்படியோ தொழிலைச் சமாளித்தார். யாரும் குற்றம் சொல்ல முடியாதபடி 'சியான வேலை செய்தார். யாருக்கு எந்த மரியாதை கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/359&oldid=787199" இலிருந்து மீள்விக்கப்பட்டது