பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து-சுந்தாவடிவேலு 323 உதகைப் பயணமும் ஈரோட்டு மாநாடும் ஈரோடு மாநாட்டுக்குப் போய்விட்டு, அங்கு இருந்து கோவைக்குச் சென்று இரண்டொரு நாள் தங்கியபின், நான் உதகைக்குச் சென்றுவரத் திட்டம் போட்டார், என் தந்தை. அதற்கான பணத்திற்கும் ஏற்பாடு செய்தார். அதுவரை நான் கம்பளியைத் தொட்டதில்லை. குளிர்காலத்தில்கூட, பருத்தித் துப்பட்டியால் போர்த்துக் கொள்வேன். அதற்குமேல் தேவைப்படவில்லை. உதகைக் குளிருக்குத் துப்பட்டி போதாது. எனவே ஒரு கம்பளி 'ஸ்வெட்டரும் ஒரு கம்பளி சால்வையும் வாங்கிக் கொண்டேன். கம்பளி சால்வை விலை ஆறேகால் ரூபாய்கள்; ஸ்வெட்டர் விலை நினைவில் இல்லை. போதிய ஆயத்தத்தோடு புறப்பட்டுச் சென்றேன். 10-5-1930 அன்று விடியற்காலை ஈரோட்டுப் புகைவண்டி நிலையத்தில் இறங்கியபோது, மழை கொட்டிக் கொண்டிருந்தது. தெருவெல்லாம் வெள்ளக்காடு. ஆயினும் மாநாட்டுத் தொண்டர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் என்னைத் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். காலைக் கடன்களை முடித்துக்கொண்டேன். எட்டு மணிபோல் அருகில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று உண்டுவிட்டு வெளியே வந்தேன். எங்கள் நெய்யாடு பாக்கத்திற்கு எதிர்க் கரையிலுள்ள இளையனார் வேலூரைச் சேர்ந்த திரு. கோவிந்தசாமி என்பவரைக் கண்டேன். அவரும் சிற்றுண்டிக்காக வந்து கொண்டிருந்தார். நான் உண்ட இடத்தில் இட்லி, தோசை நன்றாக இருந்தன என்று சொல்லி அவரை அழைத்தேன். தான் பார்ப்பன ஒட்டலில் சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிட்டு, வேறு ஒட்டலைத் தேடினார். தாவர உணவு ஒட்டலில்லை. o “காலை வேளைதானே! மிலிடரி ஒட்டலிலும் தோசை கிடைக்கும்' என்று சொல்லிக்கொண்டு, மிலிடரி ஒட்டலுக்குச் சென்றார். அவருடன் துணையாக நானும் சென்றேன். தோசை கேட்டார். பரிமாறுபவர் இரண்டு பெரிய தோசைகளைக் கொண்டு வந்தார். அவற்றின் மேல் ஊற்றியிருந்த குழம்பு என்ன குழம்பு என்று திரு. கோவிந்தசாமி கேட்டார். கறிக்குழம்பு என்ற பதில் கிடைத்தது. 'இதை நகர்த்திவை. குழம்பு இல்லாமல் இரு தோசைகளைத் *னியாகக் கொண்டுவா என்று ஆணையிட்டார். அப்படியே வரவும் 'ற்றை உண்டார். ஆனால் முந்தியதற்கும் காசு கொடுக்க நேரிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/365&oldid=787206" இலிருந்து மீள்விக்கப்பட்டது