பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 நினைவு அலைகள் இரண்டாவது சுயமரியாதை மாநாடு மாநாட்டின் முதல் நாள் காலையும் மழை பெய்தது. எனவே பிற்பகலே மாநாடு தொடங்கியது. திரு. ஆர்.கே. சண்முகம் அவர் களுடைய வரவேற்புரையும், தலைவர் திரு. எம்.ஆர். ஜெயகர் அவர்களது தலைமை உரையும் சமுதாயச் சீரமைப்பாளருக்கு எழுச்சியூட்டின; ஊக்கத்தைப் பெருக்கின. 'யார்? எந்த சாதி யார் சமையல்காரர்கள் என்பதைப் பற்றி விசாரிக்காமல் மாநாட்டுப் பிரதிநிதிகள் சமபந்தி உணவு அருந்தினார்கள். மாநாட்டில் ஏற்கெனவே அறிமுகமான திரு. எஸ்.வி. லிங்கத்தையும் திரு. சு. குருசாமியையும் கண்டேன். அவர்களோடு பூவாளுர் அ. பொன்னம்பலனார் இருந்தார். அவர் பேச்சை போட்மெயில் பேச்சு என்பார்கள். ஏன்? அவ்வளவு விரைவாகப் பேசுவார். பேச்சுகளில் தமிழ் மணம் கமழும்: பகுத்தறிவு ஒளி வீசும். மூட நம்பிக்கைகளைக் குருட்டுப் பழக்க வழக்கங்களை இடியெனத் தாக்குவார். இயக்க முன்னோடிகள் பண்பு தொடக்க கால தன்மான இயக்க முன் வரிசைப் பேச்சாளர்களுக்கு இறுமாப்பு கிடையாது. அவர்கள், தங்கள் மாநாடுகளுக்கு வருகிறவர்களுக்கு நீண்ட நேசக்கரங்களை நீட்டுவார்கள். வந்தவர்களை அனைத்துக் கொண்டு, தங்கள் இயக்கத்தவர்களாக்கிக் கொள்ளும் துடிப்பு இருக்கும். பகுத்தறிவு கொப்பளித்த அளவு, மக்கள்பால் பாசமும் சமத்துவ நேசமும் பொங்கிய தலைவரும் தொண்டர்களும் இருந்ததால் வெவ்வேறு வகையினரும் நிலையினரும் தன்மான இயக்கத்தை மொய்த்துக் கொண்டனர். அறிஞர் சண்முகம் முதல், நான்காவதோடு நின்றுவிட்ட நாராயணன் வரை, தன்மான இயக்கத்தில் பங்கு பெறுவதைப் பெருமையாகக் கருதினார்கள். பி.எஸ்.ஜி. கங்காநாயுடு போன்ற செல்வச் சீமான்கள் சிலர் வந்து ஊக்குவித்த அப்புரட்சி இயக்கத்தில், அழுக்கு வேட்டிக்காரர்கள், ஆயிரக்கணக்கில் பங்குகொள்ளத் தயங்கவில்லை. பெரியாருடன் என் முதல் சந்திப்பு இரண்டாம் நாள் பகல் உணவிற்கு என்னைப் பெரியாரின் மாடி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். திருவாளர்கள் லிங்கமும் பொன்னம்பலனாரும் என்னைப் பெரியாரிடம் அறிமுகப்படுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/366&oldid=787207" இலிருந்து மீள்விக்கப்பட்டது