பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 325 னார்கள். பொடியனாக இருந்த என் கையையும் பிடித்துப் பெரியார் குலுக்கினார். 'இவ்வளவு பற்றோடு மாநாட்டிற்கு வந்ததற்குச் சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்" என்றார் பெரியார். அவருக்கே உரிய பரிவோடு வரவேற்றார். உணவு அருந்தும்போது பெரியார் ஈ.வெ.ரா. வே முன்னின்று எங்களைக் கவனித்துக் கொண்டார். எரிமலையென மேடைகளில் காட்சியளித்த ஈ.வெ.ரா. பந்தி விசாரிப்பில் எத்தனை குழைவை வெளிப்படுத்தினார். ஒவ்வோர் இலையையும் விழிப்பாகக் கவனித்தார். யார் இலையில் எது தீர்ந்துவிட்டது என்பதைக் குறித்துக்கொண்டு அவர்களுக்கு அந்தப் பண்டத்தைப் பரிமாறச் செய்வார். ஈ.வெ.ரா.வின் உபசரிப்பு அவர்கள் குடும்பத்தின் பொதுச் சொத்து. அவருடைய அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமியும் அவர் செல்வன் சம்பத்தும் அப்படியே விளங்கினார்கள். இமயமலையளவு புரட்சிச் சிந்தனையும் இந்துமாக் கடலளவு பாசமும் ஒருங்கு இணைந்த ஒரு உத்தமப் பெரியாராக விளங்கினார். ஈ.வெ.ரா., அவர் தமிழர்களிடையே ஏன் பிறந்தார்? மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில், வருணாச்சிரமக் கொள்கையையும் சாதிப் பிரிவினையையும், பிறவியினால், ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் கொள்கையையும் மறுத்து அக்கொள்கைகளுக்கு ஆதரவான வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஏற்றத்தாழ்வு ஒழிப்புப் பணி இன்றும் தேவைப்படுகிறது. சாதிப் பட்டப்பெயர்களை விட்டுவிட வேண்டும் என்னும் முடிவு செங்கற்பட்டு மாநாட்டிலேயே எடுக்கப்பட்டது. அம்முடிவு மீண்டும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 'தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோதமென்று இம்மநாடு கருதுவதுடன் மக்களில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்கவழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டும் என்றும், பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள், தண்ணிர்ப் பந்தல்கள், கோவில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென்றும் இம்மாநாடு முடிவு செய்கிறது. என்பது மற்றோர் முடிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/367&oldid=787208" இலிருந்து மீள்விக்கப்பட்டது