பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 327 அத்தகைய பொம்மைக் கூத்து வெளியிலும் பரவிற்று. ஊர்தோறும், தெருதோறும் ஒருவகைப் பொம்மைக்கூத்து மிகத் தாராளமாக நடந்தது. எவ்வகைப் பொம்மைக் கூத்து? பெரியவர்கள் சின்னஞ்சிறுவர்களையும் - சிறுமிகளையும் மணவறையில் உட்கார வைத்து, வேடிக்கைகாட்டி, அவர்களுக்கு மனம் முடித்து மகிழும் பொம்மைக்கூத்து, அக்கால, இந்துச் சமுதாயத்தின் உயிர்மூச்சாக இருந்தது. இதைத் தடுக்க வேண்டுமென்று முற்போக்குச்சிந்தனையாளர் சிலர், வாய்ப்புக் கிட்டியபோது பேசினர்; எழுதினர். அறியாமையிருளில் சிக்கியிருந்த நம் சமுதாயத்தில் முற்போக்குச் சிந்தனையாளர்களில் எழுத்துகளைப் படித்தவர் ஆயிரத்தில் ஒருவரும் இல்லை. அக்காலப் பேச்சாளர்கள், அரங்குகளில், படிப்பாளர்கள் நடுவில் மட்டுமே பேசினார்கள். எனவே முற்போக்குக் கருத்துகள் பொதுமக்கள் காதுகளில் படவில்லை. வடக்கே, அரிவிலாஸ் சாரதா என்பவர், இந்தியச் சட்டமன்றத்தில், குழந்தை மனத்தைத் தடுக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தார். படிக்காத பொதுமக்களும் வைதீகப் புரோகிதர்களும் எதிர்த்தார்கள். அதைவிடக் கொடுமை, பட்டதாரிகள் பலர் - பொதுவாழ்க்கையில் முன்னணியில் இருந்தோர் பலர், வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்தார்கள். தென்னகத்தைப் பொறுத்த மட்டில் குழந்தை மனத்தடுப்பை, பொதுமக்கள் இயக்கமாக்கிய பெருமை பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கும் அவர் கண்ட தன்மான இயக்கத்திற்கும் சேரும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதியைச் சேர்ந்த இந்து, மற்றோர் சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லாது. எனவே, அத்தகைய திருமணங்களுக்கு வழிவிடும் புதிய திருமணச் சட்டம் ஒன்று தேவைப்பட்டது. 'சிவில் திருமணச் சட்டமொன்றை இயற்றும் படி ஈரோட்டுத் தன்மான மாநாடு கேட்டுக் கொண்டது. திருமணங்களும் மற்றச் சடங்குகளும், குறைந்த நேரத்திலும் (குறைந்த பணச் செலவிலும் நடத்தப்பட வேண்டுமென்றும், திருமணச் சடங்கு எக்காரணம் பற்றியும் ஒரு நாளுக்கு மேற்படக் கூடாதென்றும் மாநாடு வற்புறுத்திற்று. சமய நம்பிக்கைக்கு - சமயப் பழக்கங்களுக்கு எதிர்ப்பாக இராத இதையாகிலும் தமிழர்கள் செயல்படுத்தியிருந்தால், வறுமைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/369&oldid=787210" இலிருந்து மீள்விக்கப்பட்டது