பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 நினைவு அலைகள் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்து இராது. பெரியாரின் பெருந்தொண்டு, அருந்தொண்டு கடலில் பெய்த மழை! தகுதியான இந்து மத விவாக ரத்துச் சட்டமொன்று, இயற்ற வேண்டுமென்று ஈரோடு மாநாடு இந்திய அரசினைக் கேட்டுக் கொண்டது. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டுமென்பது தன்மான இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். பெண்ணுரிமைக்காகப் பெரியார் ஈ.வெ.ரா. வாழ்நாள் முழுவதும் இடையறாது தொண்டாற்றினார். "சினிமாக்களுக்கும் கோயில்களுக்கும் பெண்களைத் தனியாக அனுப்பத் தயங்காத ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கும் . மாநாடுகளுக்கும் அழைத்துவரத் தயங்குவானேன்? என்று தந்தை பெரியார் உரிமையோடு இடித்துரைப்பார். பெரியார் விரும்பிய நிலை, இனிதான் உருவாக வேண்டும். ஆண் பெண் சமத்துவத்திற்குச் செயல் வடிவம் கொடுக்காவிட்டாலும் பல ஆயிரக்கணக்கில் கூடி, உணர்வால் ஆதரித்தோம், ஈரோட்டு மாநாட்டில். 'ஆண்களைப் போன்று பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சமஉரிமை இருக்க வேண்டுமென்றும் எந்தத் தொழிலிலும் ஈடுபடவும், அதைக் கையாளவும் சமஉரிமை இருக்கவேண்டுமென்றும், குறிப்பாகத் தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகப் பெண்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும்' ஒருமனதாக, பெருத்த ஆரவாரத்துடன் முடிவு செய்யப்பட்டது. 'இந்நாட்டு மக்களின் வறுமையைப் போக்கி, அவர்களுடைய பொருளாதார நிலைமையைச் சீர்படுத்தக் குடியை ஒழிக்க வேண்டுவது தேவையென, இம்மாநாடு கருதுவதுடன் பூர்ண மதுவிலக்கைக் கொண்டுவர அரசும் மக்களும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் இந்த மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.' இது ஈரோட்டு மாநாட்டு முடிவுகளில் ஒன்று. இதை நிறைவேற்றிய பல்லாயிரவர்களில் ஒருவனாக நானும் இருந்ததைப் பற்றி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். மதுவைத் தொடாத தன்மான இயக்கத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால் மட்டுமல்ல. தொடக்க கால, தன்மான இயக்கத்தவர்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர, மற்றவர்கள் மதுவைத் தொடாதுனர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/370&oldid=787213" இலிருந்து மீள்விக்கப்பட்டது