பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 329 'விபச்சாரத் தடை மசோதா ஒன்று கொண்டு வந்து நிறைவேற்றிய தற்கு இம்மாநாடு சென்னைச் சட்டசபையைப் பாராட்டுவதுடன், அச்சட்டத்தை உடனே அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், அரசினர் தாராளமாக மான்யங்கள் அனுமதித்து, பெண்கள் பாதுகாப்பு விடுதிகள் ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது? இது ஒர் முடிவு. எவ்வளவு தொலைநோக்கோடு பாதுகாப்பு விடுதிகளை ஏற்படுத்தச் சொல்லியுள்ளார்கள். நம்மவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சாலை, குளம், கிணறு, கோயில் முதலியவைகளில் சமஉரிமை இல்லாமை யைச் சுட்டிக்காட்டி, அவ்விடங்களில் சுயமரியாதையை நிலைநாட்ட சாத்வீக முறையில் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தது. அதற்காக ஒரு குழுவையும் நியமித்தது, ஈரோட்டு மாநாடு. மேற்படி சத்தியாகிரகத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்த முடிவெடுத்தது. அதோடு இளைஞர்களைச் சத்தியாகிரகத்திற்கு ஆயத்தமாகும்படிக் கேட்டுக் கொண்டது. 'எந்தப் பொதுக்கூட்டங்களிலும் தொடக்கத்திலாவது முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவை செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று, இளைஞர் மாநாடு முடிவு செய்தது. 1930 இல் வெள்ளையன் ஆண்டான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆங்கில அரசனுக்கு வாழ்த்துப் பாடக்கூடாது என்று முடிவு செய்த சுயமரியாதைக்காரர்கள் அன்னிய அடிமைகளா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். முதியோர் கல்வியைப் பரப்புவோம் ஏழை மக்களுக்கு இராப்பள்ளி ஏற்படுத்திக் கல்வியைப் போதிப்பதுடன், நமது இயக்க நோக்கங்களையும் போதிப்பது என்பது இளைஞர் மாநாட்டு முடிவுகளில் ஒன்று. அந்தோ செயல்படாத முடிவுகளில் இதுவும் ஒன்று! பாரதத்தின் தந்தை காந்தியடிகளார், எல்லோரும் முதியவர்களும் - கற்கவேண்டுமென்று விரும்பினார். பெரும்பாலானோர், தற்குறிகளாக இருக்கும் அவமானத்தையும் பாவத்தையும் துடைக்கத் துடித்தார். தமது ஆக்கத்திட்டங்கள் பதினான்கில், எழுத்தறிவுத் தொண்டைச் சேர்த்தார். இருப்பினும் இத்திட்டம் சூடுபிடிக்கவில்லை. முதியோர் "முத்தறிவு இயக்கம் பரவவில்லை. பெரியார் ஈ.வெ.ரா. தள்ளாத வயதிலும் மக்களின் தற்குறித் *ன்மையைக் கண்டு, மிகவேதனையும் வெட்கமும் பட்டு, நாடறியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/371&oldid=787214" இலிருந்து மீள்விக்கப்பட்டது