பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 நினைவு அலைகள் வரையிலாவது பள்ளிக் கூடங்களுக்குச் செல்லவிட வேண்டும் எனவும் தாய் மொழியிலேயே அவர்களுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டுமெனவும் இம்மாநாடு முடிவு செய்கிறது என்பதாகும். பதினாறு வயது வரையில் என்றால் பதினோராவது வகுப்பு முடிய என்று பொருள். பெண்கள், உயர்நிலைப்பள்ளி வரையிலாவது படிக்க வேண்டும். ஏன்? பெண் படித்தால் குடும்பமே படித்த பலன். எனவே பெண் கல்வியை இவ்வளவு வற்புறுத்தினார்கள். குழந்தை மணத்தைத் தடுக்கும் சாரதா சட்டத்தை நிறைவேற்றி யதற்கு நன்றி தெரிவித்ததோடு பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க இந்தியச் சட்டசபையில் திரு. ஜெயகர் கொண்டு வந்திருக்கும் மசோதாவையும் சென்னைச் சட்டசபையில் டாக்டர் முத்துலெட்சுமி கொண்டு வந்திருக்கும் மசோதாவையும் ஆதரிப்பதாக முடிவு செய்தது. ஆண் பெண் சமவுரிமையை வலியுறுத்தல், சமூகத் தொண்டில் பெண்கள் பெருமளவு பங்குகொள்ளும்படி வேண்டுதல், பெண்களைச் சட்டசபைக்கும் நகரமன்றங்களுக்கும் தேர்ந்து எடுக்க வேண்டுதல்." தேவதாசிகளை, திருமணம் முதலியவைகளுக்கு அழைக்காமல் இருத்தல், குடியொழிப்பு ஆகியவற்றை ஆதரித்து மாதர் மாநாட்டில் முடிவு செய்தார்கள். அப்புதுமைப் பெண்கள் வாழி, அவர் புரட்சிக் கருத்துகள் வெல்க. பாசி பிடித்துப் போன, நம் சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்குத் தேவையான புரட்சிகரமான கருத்துகளை, காலத்திற்கு முந்தி, பிரசாரம் செய்ததால், தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வும் அவருடைய இயக்கத் தோழர்களும் ஏற்ற, ஏற்றுக் கொண்டிருக்கும் பழியும் எதிர்ப்பும் அம்மா, பெரிது! சென்னை மாகாண மாதர் மாநாடு இப்போது, மற்றோர் நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ஈரோட்டுச் சுயமரியாதை மாநாட்டிற்கு ஆறு திங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு மாகாண மாதர் மாநாடு, நடந்தது. அது சுயமரியாதை இயக்கத்தவர் மாநாடு அல்ல. பின் என்ன? சென்னை மாகாண மாதர் மாநாடு. விலிங்டன் மாதர் கிளப்பில் நடந்த அம்மாநாட்டுக்கு எவர் தலைவர் திருமதி எஸ். சீனிவாச அய்யங்கார் ஆவார். அனைத்திந்திய காங்கிரசு தலைவராக இருந்த திரு. எஸ். சீனிவாச அய்யங்காரின் மவிையார், அம்மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/374&oldid=787218" இலிருந்து மீள்விக்கப்பட்டது