பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 நினைவு அலைகள் ஆண்டு அநீதிகளைத் தவிடு பொடியாக்கும் அணுகுண்டுகளாகச் செயல்படும். இதைப் புரிந்துகொண்டவர்கள் இருட்டடிப்பு, திரித்துக் கூறல், மிகைப்படுத்தல், துாற்றல் மாரி ஆகிய எதிர்ப்புக் கணைகள் அனைத்தை யும் பொழிந்தார்கள். பொழிந்துகொண்டும் இருக்கிறார்கள். இது எதிர்பார்த்ததே! ஆனால் சமுதாய ஏணியின் கீழ்ப்படிகளில் உள்ளவர்கள் இன்னும் விழிப்புப் பெறாதது வேதனையே! 42. கோவையிலும் உதகையிலும் சில நாள்கள் நண்பர் சின்னசாமி -- தன்மான இயக்கத்தின் எவரெஸ்டாக விளங்கிய இரண்டாவது மாநில சுயமரியாதை மாநாட்டில், பிரதிநிதியாகக் கலந்து கொண்டபின் கோவைக்குப் பயணமானேன். புகைவண்டியில் சென்றேன். அப்போது, கோவை புகைவண்டி நிலையம் ஒரு சந்திப்பாக இல்லை. வெறும் நிலையமாகவே இருந்தது. புகைவண்டி நிலையத்திற்கு அருகில் காவல்துறையினர் வீடுகள். கல்லூரியில் எனக்கு ஈராண்டு மூத்தவராகவும் விக்டோரியா மாணவர் விடுதியில் எனக்குக் கணக்குப் பாடம் சொலித் தந்தவராகவும் விளங்கிய நண்பர் திரு. நா. சின்னசாமி, காவல்துறையினர் லைனில்' குடியிருந்தார். ஏன்? அவர் தந்தை காவல்துறையில் வேலை பார்த்தார். திரு. நாராயணசாமி, எளிய வேலையில் இருப்பினும் பெரிய தொலைநோக்கு உடையவர். தமது, சொற்ப ஊதியத்தில், செட்டாக, வாழ்ந்ததோடு, தமது ஒரே மைந்தரை, கல்லூரிப் படிப்பிற்கும் அனுப்பி வைத்தார். = திரு. சின்னசாமி பொறுப்பான பிள்ளை; வசதி குறைந்த சிறிய வீட்டில் குடியிருந்த போதிலும் மிகுந்த அக்கரையோடு படித்தார் நல்ல மதிப்பெண்கள் எண்கள் பெற்றார். முதல் தலைமுறைப் படிப்பாளியும் முதல் தரமான மதிப்பெண்கள் பெற முடியுமென்று மெய்ப்பித்தார். இக்கால இளைஞர்களுக்கு இதைச் சுட்டிக்காட்ட ஆள் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/376&oldid=787220" இலிருந்து மீள்விக்கப்பட்டது